அட்ரா சக்க !! சவூதி அரேபியா இனி சொர்க்க பூமி தான்.. கண்டறியப்பட்ட மிகப்பெரிய தங்க சுரங்கம்..

By Thanalakshmi V  |  First Published Sep 23, 2022, 5:39 PM IST

மேற்கு சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மதீனாவில் தங்கம் மற்றும் செம்பு தாதுக்கள் இருக்கும் இடங்கள் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. 
 


சவூதி அரேபியாவில் உள்ள புனித மதீனாவில் தங்கம் மற்றும் செம்பு தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதுக்குறித்து சவூதி அரேபியாவின் புவியியல் ஆய்வு மையம், ட்விட்டரி்ல் பதிவிட்ட கருத்தில் “ புனித தளமான மதீனா மண்டலத்திலுள்ள அபா அல் ராஹா எல்லை உட்பட்ட பகுதியில் தங்க தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதீனாவின் வாதி அல்வரா மண்டலத்தில் உள்ள அல் மதிக் எனும் இடத்தில் 4 செம்பு தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் உலக நாடுகளில் எங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரிவடைகின்றன. உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும்” ” எனத் தெரிவித்துள்ளது

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:உக்ரைன், ரஷ்யா இடையே அமைதியை ஏற்படுத்த பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்... ஐ.நா.வில் மெக்சிகோ வலியுறுத்தல்!!

அல் அரேபியா அறிக்கையின்படி, “ தங்கம், மற்றும் செம்பு தாதுக்கள் கண்டுபிடிப்பின் மூலம், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பங்களிப்பு செய்யப்படும்.  புதிதாக கண்டறியப்பட்டுள்ள இரும்பு மற்றும் செம்பு தாதுக்களால் 533 கோடி டாலர் முதலீடு செய்யப்படும், 4000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கிறது

சவூதி புவியியலாளர்களின் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அப்துல்லாஸ் பின் லாபன் கடந்த ஜனவரி மாதம் அளித்த ஒரு பேட்டியி்ல “ சவூதி அரேபியாவில் சுமார் 5,300 சுரங்கள் உள்ளன. இதில் உலோகப் பாறைகள், உலோகம் அல்லாத பாறைகள், கட்டிடங்கள் கட்டப்பயன்படும் கற்கள், ரத்தினங்கள், அலங்காரப் பாறைகள் ஆகியவை உள்ளன” எனத் தெரிவித்திருந்தார்

இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிவிப்பில் “2030ம் ஆண்டு விரிவாக்க செயல்திட்டத்தின் கீழ், விரிவுபடுத்த வேண்டிய துறையில் சுரங்கத்துறை முக்கியமானது” னத் தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க:கனடாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

 

click me!