கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள், பஞ்சாபை தனிநாடாக அறிவிக்கக்கோரி, அங்கு காலிஸ்தான் வாக்கெடுப்பு நடத்தின. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..தமிழகத்தில் 24 மணி நேரமும் மது,கஞ்சா கிடைக்கும்.. ஸ்டாலின் பிளான் இதுதான் - திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வெறுப்புத் தாக்குதல்கள், பிரிவினைவாத வன்முறைகள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் கனடாவில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. தூதரகம் வாயிலாக கனடா நாட்டிற்கு இந்தக் குற்றங்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குற்றவாளிகள் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. அதிகரிக்கும் குற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்திய மக்களும், மாணவர்களும் இந்தியாவிலிருந்து கனடாவுக்குச் செல்லும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். ஏற்கெனவே அங்கே வாழும் இந்திய மாணவர்களும், இந்தியர்களும் விழிப்புடன் இருப்பது அவசியம்.
மேலும் செய்திகளுக்கு..“காந்தி ஜெயந்தி அப்போ RSS பேரணியா? தமிழக மண்ணில் பேராபத்து?” கொந்தளிக்கும் சீமான்!
அங்குள்ள இந்தியர்கள் ஒட்டாவா, டொரன்டோ, வான்கூரில் உள்ள தூதரகங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அப்போதுதான் ஏதேனும் அவசரநிலை ஏற்படும்போது உங்களால் துணைத் தூதரகம், தூதரக ஜெனரலுடன் தொடர்புகொள்ள எளிதாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..எடப்பாடி, வேலுமணியை உருவாக்கியவர்..கொங்கு மண்டலத்தின் பவர் சென்டர் மறைவு - யார் இந்த ராவணன்!