உக்ரைனின் பிரிவினைவாத அல்லது மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்ய குடிமக்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கு உத்தரவிட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த வாக்கெடுப்பு நடந்து வருகிறது.
உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைவதா இல்லையா என்பது குறித்து வாக்களிப்பதாக முன்னதாகவே அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அறிவித்து இருந்தனர். இந்த இரண்டு பகுதிகளைத் தவிர, ரஷ்யாவின் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ள சாபோரிஜியா பகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உக்ரைனை ராணுவத்தை எதிர்த்து போரிடுவதற்கு ரஷ்ய ராணுவத்தில் சுமார் 3 லட்சம் ஆட்களை சேர்ப்பதற்கு அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதற்கு பயந்து அந்த நாட்டில் இருந்து இளைஞர்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளால் இந்த வாக்கெடுப்பு கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது. எந்தவித சட்ட ஆதாரமும் இல்லாமல் உக்ரைன் பகுதிகளை இணைக்க முடியாது என்று மேற்கத்திய நாடுகள் மற்றும் உக்ரைன் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
செப்.27 ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி... ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு!!
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளைச் சேர்ந்தவர்களை ரஷ்யாவின் ஒரு பகுதியாக இணைக்க விரும்புவது மாஸ்கோவின் வழியில் செல்ல விளாடிமிர் புடின் வழி வருகிறார் என்றே கூறப்படுகிறது. இந்தப் பகுதிகளை தங்களுக்கு சொந்தம் என்று உக்ரைன் கூறி வரும் நிலையில் கிரம்ளின் தனதாக்கிக் கொள்ள வாக்கெடுப்பை நடத்துகிறது. கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக உக்ரைன், ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது.
Military age men mobilized at Moscow airport today. To get out of Russia.
I remain a master strategist. pic.twitter.com/yegNUxsCUp
ரஷ்யாவில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கப்பட்டு வரும் நிலையில் தகுதியானவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு தப்பி வருகின்றனர். அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பலரும் பல்வேறு நகரங்களில் இறங்கி போராடி வருகின்றனர். போராடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கு விமான நிலையத்தில் டிக்கெட் வழங்கக் கூடாது என்று ரஷ்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டேன்... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புடின்
வாக்கெடுப்பு மூலம் உக்ரைனுக்கு சொந்தமான பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைந்தாலும், இதை அங்கீகரிக்க மாட்டோம் என்று உக்ரைன் மற்றும் இதன் கூட்டணி நாடுகள் தெரிவித்துள்ளன. வியாழக்கிழமை நடந்த ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன், ரஷ்யா இருநாடுகளும் பங்கேற்றன. இருநாடுகளின் பிரதிநிதிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டனர். ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது என்று மற்ற நாடுகள் அந்த நாட்டை வலியுறுத்த வேண்டும் என்றும், உக்ரைன் மீதான பயங்கரமான போரை ரஷ்யா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக் கொண்டது.
பால்டிக் ஸ்டேட்ஸ் என்றழைக்கப்படும் எஸ்தோனியா, லிதுவேனியா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த மின் தொகுப்பில் இருந்து நீக்கி விட்டால், எஸ்தோனியா நாட்டுக்கு மின் விநியோகம் இருக்காது என்று அந்த நாட்டின் பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
சோவியத் யூனியனில் இருந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த எஸ்தோனியா இன்று ஐரோப்பியா நாடுகளுடன் இணைந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னரும், மின் விநியோகத்திற்கு ரஷ்யாவைத்தான் சார்ந்து உள்ளது.