
சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான தர்மன் சண்முகரத்தினம், எதிர்வரும் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ளார்.
66 வயதான முன்னாள் அமைச்சர் தேர்தலுக்குத் தயாராகிவிட்டார். ஆனால் அவரது ஊடகக் குழு இது குறித்து அதிக தகவல்களை வெளியிடவில்லை. ஆனால், அவர் தகுதிச் சான்றிதழுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருப்பது அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை மிரட்டும் கோடைப் புயல்... ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து... இருளில் மூழ்கிய நகரங்கள்
சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் வரும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. தற்போதைய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி முடிவதை அடுத்த அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் தான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என ஹலிமா தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகக் கூறி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தர்மன் சண்முகரத்தினம் அறிவித்துத்தார். 66 வயதாகும் தர்மன் சண்முகரத்தினம் ராஜினாமா கடிதத்தை தர்மன் சண்முகரத்தினம் பிரதமர் லீ சியன் லூங் வசம் ஒப்படைத்தார்.
ஏற்கெனவே இதற்கு முன் தர்மன் சண்முகரத்தினம் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தவர். ஆனால், அந்த வாய்ப்பு அவருக்குக் கைகூடவில்லை. இந்த முறை தர்மன் சண்முகரத்தினம் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர் என்று சொல்லப்படுகிறது.
தர்மன் சண்முகரத்தினம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் கென்னடி ஸ்கூல் ஆஃப் கவர்மெண்ட் உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர். பொருளாதார பட்டதாரியான இவர் அரசு வங்கி ஊழியராக தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், சிங்கப்பூர் நிதி ஆணைய தலைவராகவும் இருந்துள்ளார். துணைப் பிரதமராகவும், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் என பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சராக செயல்பட்டுவந்த தர்மன், பொருளாதார திட்டங்களில் பிரதமருக்கு ஆலோசனைகள் வழங்கும் முக்கியத் தலைவராக உள்ளவர். சர்வதேச நிதியம் மற்றும் நிதிக் குழுவின் ஆசியா பிரிவு தலைவராகவும் இருந்தவர் தர்மன் சண்முகரத்தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த நெவில் ராய் சிங்கம்? இவரது நிதி நெட்வொர்க் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டது எப்படி?