இந்திய வம்சாவளி நபருக்கு 18 ஆண்டுகள் தடுப்புக் காவல், 12 கசையடி.. சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு..

By Ramya s  |  First Published Aug 8, 2023, 1:15 PM IST

சிங்கப்பூரில் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இந்திய வம்சாவளி நபருக்கு 18 ஆண்டுகள் தடுப்புக் காவலும் 12 கசையடிகளும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


சிங்கப்பூரை பொறுத்தவரை ஒருவர் குற்றம் செய்து தண்டனை பெற்று மீண்டும் குற்றம் செய்தால் கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு இதுபோன்ற கடுமையான தண்டனைகள் இப்போது வழங்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மார்க் கலைவாணன் (44) என்பவர் பாலியல் குற்றச்சாட்டில் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். அவர் 2017 இல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் சிறையில் இருந்து விடுதலையான சில நாட்களில், குடிபோதையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து, துணிகளை இஸ்திரி செய்து கொண்டிருந்த பணிப்பெண்ணை  தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தார்.

அந்த பெண்ணின் அலறல் சத்தத்தால் சிக்கிய மார்க் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட, மார்க் கலைவாணன் தமிழரசன், 44, மோசமான பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை செய்ய வீட்டில் அத்துமீறி நுழைதல், பொது ஊழியரைப் போல ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

தவறு செய்பவர்களிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க தடுப்புக் காவல் விதிக்கப்படுகிறது. பாலியல் பலாத்காரத்திற்காக 16 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் தடுப்புக் காவலில் இருக்குமாறு துணை அரசு வழக்கறிஞர்கள் செவ் சின் யிங் மற்றும் ஷெல்டன் லிம் ஆகியோர் வலியுறுத்தினர்.

எனினும் கடந்த பிப்ரவரியில் நடந்த கடைசி தண்டனை விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவரின் மாமா, தனது மருமகனை சிறையில் சந்தித்ததாகவும், அவர் தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் கூறினார். இந்த வாதங்களின் அடிப்படையில், நீதிபதி பாங் காங் சாவ், நீதிமன்றம் அவருக்கு தண்டனையை அறிவிக்கும் முன், மற்றொரு தடுப்புக்காவல் தகுதி அறிக்கைக்கு உத்தரவிட்டார்

இரண்டாவது அறிக்கையும் அதே முடிவுகளைக் கொண்டிருந்தது. கலைவாணனை 20 ஆண்டுகள் தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அரசுத் தரப்பு உறுதியாக இருந்தது.

இதை தொடர்ந்து கலைவாணன் "பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்" என்றும் " மன்னிப்புக்கு அப்பாற்பட்டவர்" என்றும் நீதிபதி கூறினார். "இரண்டு தடுப்புக்காவல் அறிக்கைகளும் அவரது பங்கில் எந்த வருத்தத்தையும் காட்டவில்லை, மேலும் கலைவாணன் கடந்த கால மற்றும் நிகழ்கால பாலியல் குற்றங்களுக்கு பொறுப்பேற்க மறுக்கிறார்" என்று நீதிபதி மேலும் கூறினார்.

சமூகத்தை ஒழுங்காக வைத்திருக்க இதுபோன்ற கடுமையான தண்டனைகள் அவசியம் என்று அந்நாட்டு அரசாங்கம் பலமுறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எமனாக மாறிய தலையில் மாட்டிய கிளிப்.. பெண்களே உஷார் - வீடியோ போட்டு விளக்கம் கொடுத்த பெண்!

click me!