நடுக்கடிலில் கொரோனா வைரசுடன் தவிக்கும் இந்தியர்கள்..!! அலேக்காக தூக்கிவர விரைகிறது விமானம்..!!

By Ezhilarasan BabuFirst Published Feb 26, 2020, 1:35 PM IST
Highlights

ஜப்பானில் உள்ள யோகோமா துறைமுகம் அருகே  கடந்த  மூன்றாம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் சுமார் 3 ஆயிரத்து 711 பேர்  சிக்கி தவித்து வருகின்றனர். அதில்  152 ஊழியர்கள் 6 பயணிகள் என மொத்தம்  138 இந்தியர்கள் அதில் உள்ளனர் . 
 

ஜப்பானின் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் சிக்கித்தவிக்கும் 138 இந்தியர்களை மீட்க தனி விமானம்  தயார் செய்யப்பட்டுள்ளதாக  தகவல்வெளியாகி உள்ளன. கப்பலில் உள்ள மருத்துவக் குழுவினரின் அனுமதியுடன் அவர்களை அழைத்து வர இந்திய விமானம் விரைய உள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது .  ஜப்பானில் உள்ள யோகோமா துறைமுகம் அருகே  கடந்த  மூன்றாம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் சுமார் 3 ஆயிரத்து 711 பேர்  சிக்கி தவித்து வருகின்றனர். அதில்  152 ஊழியர்கள் 6 பயணிகள் என மொத்தம்  138 இந்தியர்கள் அதில் உள்ளனர் . 

கொரோனா வைரஸ் அச்சத்தால் அந்த கப்பல் நாட்டிற்குள் அனுமதிக்கப்படாமல் கடலிலேயே  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் அந்த கப்பலில் வைரஸ்  பரவியதில் பலருக்கும் கொரோனா  தொற்று  ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது .  இதற்கிடையே வ பிரத்யேக  மருத்துவ குழு  ஒன்று கப்பலுக்குள் சென்று  மருத்துவ பரிசோதனை செய்தது .   அதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டனர் .  இதைத் தொடர்ந்து கப்பலில் மீதம் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா புதுரகம் ஏற்கனவேதெரிவித்திருந்தது .

 

அதனடிப்படையில் அவர்கள் அனைவரையும்  அழைத்து வர இந்தியாவின் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் டுவிட்டரில் தெரிவித்துள்ள பதிவில் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அத்துடன் கப்பலில் உள்ள மருத்துவ குழுவினரின்  ஒப்புதல் ,  மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் கப்பலில் உள்ள மருத்துவக்  குழுவினரின் அனுமதி அடிப்படையில் கப்பலில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.   கப்பலில் சிக்கியுள்ளவர்களுக்கும்  இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியுது.
 

click me!