ஆணவத்தில் துள்ளியவர்களை ஒரேயடியாக அடக்கிய கொரோனா..!! இப்போ தென்கொரியாவையும் துவம்சம் செய்கிறது..!!

By Ezhilarasan Babu  |  First Published Feb 26, 2020, 1:07 PM IST

சீனாவுக்கு அடுத்தபடியாக ஜப்பானில் அதிவேகமாக பரவி வந்த இந்த வைரஸ்  தற்போது  தென்கொரியாவிலும் தன்னுடைய வேலையை காட்ட தொடங்கி உள்ளது .  இந்த வைரசுக்கு இதுவரை இங்கு  8 பேர் பலியாகி உள்ளனர் . 


சீனா ஜப்பானுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துள்ளது . ஒரே நாளில் சுமார் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது ,  இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை  தென்கொரியாவில் சுமார் 893 ஆக உயர்ந்துள்ளது .  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுக்கான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும் பரவியுள்ளது .  இதுவரையில் சுமார் 2500க்கும் மேற்பட்டோர் இந்த வைரசுக்கு  உயிரிழந்துள்ளனர் . 

Latest Videos

சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  சீனா மட்டுமின்றி ஜப்பான் , தென்கொரியா ,  சிங்கப்பூர் , ஹாங்காங் தாய்லாந்து , அமெரிக்கா ,  ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது .   நாளுக்கு நாள் வீரியம் அடைந்துள்ள இந்த வைரஸ் சர்வதேச அச்சுறுத்தலாக மாறியுள்ளது .   சீனாவுக்கு அடுத்தபடியாக ஜப்பானில் அதிவேகமாக பரவி வந்த இந்த வைரஸ்  தற்போது  தென்கொரியாவிலும் தன்னுடைய வேலையை காட்ட தொடங்கி உள்ளது .  இந்த வைரசுக்கு இதுவரை இங்கு  8 பேர் பலியாகி உள்ளனர் .  நேற்று ஒரே நாளில்  60 பேருக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 893 ஆக உயர்ந்துள்ளது . 

நோய் பரவலை தடுக்க தென்கொரிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .  புதிதாக நோய் பாதித்த 60 பேரில் 49  டேகு பகுதியைச் சார்ந்தவர்கள் ஆவர்,   தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதை அடுத்து நாடாளுமன்றமும் மூடப்பட்டுள்ளது .  கடந்த வாரம் கொரோனா பாதித்த ஒருவர் நாடாளுமன்றத்திற்கு வந்ததாக வந்த தகவலையடுத்து நாடாளுமன்றத்தை மூடி அதை  தூய்மைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது . கொரோனாவால்  அங்கு  முககவசம் மற்றும்  கையுறை  தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .  
 

click me!