கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க களமிறங்கியது அமெரிக்கா...!! 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி அதிரடி...!!

By Ezhilarasan Babu  |  First Published Feb 26, 2020, 12:37 PM IST


வைரஸ் தொற்று காரணமாக  சீனாவில் உயிர்பலி அதிகரித்துவருகிறது வெளிநாடுகளில் இந்த வைரஸ் பரவ தொடங்கும் மனித உயிர்களை  காவு வாங்கி வருகின்றன.


சீனாவில் கோரோனா வைரஸ் உயிர்பலி  அதிகரித்து வரும் நிலையில் ,  அந்த வைரஸ் நோய்களை விரட்டவும் அதற்கு புதிய மருந்து கண்டுபிடிக்கவும் அமெரிக்கா 2.5 பில்லியன் டாலர்களை ஒதுக்க திட்டமிட்டுள்ளது.  அதாவது 17 ஆயிரத்து 997 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது.   அமெரிக்காவின் இந்த முயற்சியை சர்வதேச நாடுகள் வெகுவாக பாராட்டியுள்ளன . கடந்த டிசம்பர் மாசம் சீனாவின்  ஹூபெய் மாகாணம்  வுஹானில் தோன்றிய கொரோனா  வைரஸ்  சீனா முழுவதும் பரவியுள்ளது . இந்த வைரஸுக்கு சீனாவில் மட்டும் 2663பேர் உயிரிழந்துள்ளனர்.   சுமார் 77 ஆயிரத்து 568  பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

 

Latest Videos

சீனாவில்  நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 பேர் உயிரிழந்து வருகின்றனர்.   இந்த வைரஸை கட்டுப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை ,  இதனால் வைரஸ் தாக்கம் மிக அதிகமாக உள்ளது .  ஆனாலும் அதன் வீரியம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது .  சீனாவில் மட்டுமின்றி சுமார் 20 க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா  பரவியுள்ளது.  ஆனாலும் காய்ச்சலை குணப்படுத்த இதுவரை  மருந்து இல்லாததால் சீனாவில்  பலிஎண்ணிக்கை அதிகரித்தது வருகிறது .  இந்நிலையில்  சீனா சர்வதேச நாடுகளின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது .  உலகில் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் சீனாவுக்கு உதவ முன்வந்துள்ளன ,  நோய் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அதேபோல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது .

வைரஸ் தொற்று காரணமாக  சீனாவில் உயிர்பலி அதிகரித்துவருகிறது வெளிநாடுகளில் இந்த வைரஸ் பரவ தொடங்கும் மனித உயிர்களை  காவு வாங்கி வருகின்றன இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக 2.5 மில்லியன் டாலர்களை அதாவது 17, 997 கோடி செலவிட  அமெரிக்கா திட்டமிட்டுள்ளது .  இதற்காக அதிபர் தலைமையிலான நிர்வாகம் அவசர நிதியாக சுமார் 1.25 பில்லியன் டாலரை  ஒதுக்கீடு  செய்யும்படி நாடாளுமன்றத்தில்  ஒப்புதல் கோரியுள்ளது இந்த நிதியின் மூலமாக கொரோனாவுக்கு  மருந்து கண்டுபிடிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும்  அமெரிக்கா முடிவு செய்துள்ளது .

 

 

click me!