உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தாஜ்மஹால் வாயிலில் இருந்து, ஐநூறு மீட்டர் வரையிலான பகுதிகளுக்குள், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு அனுமதியில்லை
*குடியுரிமை என்பது மதத்தின் அடிப்படையிலானது அல்ல. மண்ணின் அடிப்படையிலானது. இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் இந்த மக்கள். எழுபது ஆண்டுகளாக இருக்கும் அடிப்படை கோட்பாட்டை தவிடு பொடியாக்கியுள்ளது மத்திய அரசு. - ப.சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.)
*நாடு முழுவதும் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. திருமணம் மற்றும் பல சுபகாரியங்களை நடத்த உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும். அத்துடன், சேதாரம் எனும் பெயரில் நடக்கும் கொள்ளையையும் தடுக்க வேண்டும். -டாக்டர். ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)
*அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பார்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருந்தணும். அவர் திருந்துவாரான்னு பொருத்திருந்து பார்ப்போம். தி.மு.க.வின் குணமும், மனமும் மாறாது. எங்க கட்சிக்கும், ஆட்சிக்கும் ஏதாவது குடைச்சல் கொடுக்குறதே ஸ்டாலினின் எண்ணமா இருக்குது. -செல்லூர் ராஜூ (தமிழக அமைச்சர்)
*குடியுரிமை சட்டத்தைப் பொறுத்தவரையில் பா.ம.க.வின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த சட்டமானது குடியுரிமை கொடுப்பதற்கான சட்டம். பறிப்பதற்கான சட்டம் இல்லை. ஸ்டாலின் ஏதாவது அரசியல் செய்யவும், ஓட்டுக்காவும் தூண்டி விட்டு வருகிறார். முஸ்லீம்களின் போராட்டங்கள் தேவையற்றது. - அன்புமணி ராமதாஸ் (பா.ம.க. இளைஞரணி செயலாளர்)
*வருமான வரித்துறை நடிகர் ரஜினிகாந்துக்கு அறுபத்து ஆறு லட்சம் ரூபாய் விலக்கு அளித்துள்ளது. ஆனால் அதே வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு, சிறைதண்டனை வழங்கியுள்ளது. ரஜினிக்கு ஒரு நீதி, சசிக்கு ஒரு நீதியா?-சீமான் (நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்)
*தமிழகத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களா? வெட்கக்கேடு! இன்னொன்று...தயவு செய்து மண்குதிரை ஸ்டாலினை, முஸ்லிம் சகோதரர்கள் நம்ப வேண்டாம். முஸ்லிம்களை ஸ்டாலின் தூண்டிவிடுகிறார். -ஹெச்.ராஜா (பா.ஜ.க. தேசிய தலைவர்)
*விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் ஸ்டாலின். எப்படி இந்த ஆட்சியை கவிழ்ப்பது? என்றே எந்நேரமும் எண்ணி வருகிறார். வரும் 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் வென்று தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் அ.தி.மு.க. ஆனாலும், சட்டசபை தேர்தல் இந்தாண்டு இறுதியில் வரும் என்பது உண்மையல்ல. -ஜெயக்குமார் (மீன்வளத்துறை அமைச்சர்)
*டில்லியின் சர்தார் படேல் மார்க் பகுதியில் உள்ள, ஐ.டி.சி. மவுரா ஓட்டலில் உள்ள ‘தி கிராண்ட் பிரசிடென்ஷியல் சூட்’ அல்லது ‘சாணக்கியா சூட்’ என்றழைக்கப்படும் 4,600 சதுர அடி கொண்ட அறையில், டிரம்ப் தங்குகிறார். இங்கு ஒரு நாள் இரவு தங்குவதற்கான வாடகை எட்டு லட்சம் ரூபாய். -பத்திரிக்கை செய்தி.
*இந்தியா மற்றும் அமெரிக்காவின் கொள்கைகள் ஒரு காலத்தில் மனித உரிமை மற்றும் மனித கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் இருந்தன. ஆனால் தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையை இரண்டு நாட்டு தலைவர்களும் கொண்டுள்ளனர். அவர்களுடைய கொள்கைகள் அகதிகள் மற்றும் அடைக்கலம் கேட்போருக்கு எதிராக, பாகுபாடு, மதவெறி மற்றும் விரோதம் கொண்டதாக உள்ளது.
-ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு.
*உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தாஜ்மஹால் வாயிலில் இருந்து, ஐநூறு மீட்டர் வரையிலான பகுதிகளுக்குள், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு அனுமதியில்லை. எனவே அமெரிக்க அதிபர் டிரம்பின் கார், தாஜ்மஹால் வளாகத்தின் கிழக்கு வாயில் அருகே உள்ள ஓபராய் அமர்விலாஸ் ஓட்டல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அதன் பின் பேட்டரியில் இயங்கும் காரில் தாஜ்மஹாலுக்குள் அழைத்து வரப்பாடார் டிரம்ப்- பத்திரிக்கை செய்தி.