சீனாவுக்குள் கெத்தா நுழைகிறது இந்திய ராணுவ விமானம்...!! சிக்கி தவிப்பவர்களை மீட்க ஏற்பாடு...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 20, 2020, 4:41 PM IST
Highlights

முதற்கட்டமாக மத்திய அரசின் ஏர்-இந்தியா சிறப்பு விமானம்  வுஹான் நகருக்கு சென்று சுமார்  324 இந்தியர்களை டெல்லிக்கு அழைத்து வந்தது.   அதன் பின்னர் இரண்டாவது விமானத்தை அனுப்பி மேலும் 300 பேர் மீட்கப்பட்டனர்.  
 

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள வுஹானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தனி விமானம் ஒன்று நாளை சீனா புறப்படுகிறது .  இதுவரை 524 பேர் மீட்க்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது முறையாக இந்திய விமானம் சீனா செல்ல உள்ளது .  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹானில்  தோன்றிய கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும் பரவி உள்ளது .  இதுவரையில் அந்த வைரசை அழிக்க மருந்து கண்டுபிடிக்கப்படாததால் வைரஸ் கிருமி வேகமாக பரவி வருகிறது.  இதுவரையில் சுமார்  2004 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர் . 74 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு  வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . 

 சீனாவில் மட்டுமல்லாது ஜப்பான் , ஹாங்காங் ,  சிங்கப்பூர் ,  தாய்லாந்த் , அமெரிக்கா ,  ஆஸ்திரேலியா உள்ளிட்ட  100க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பரவியுள்ளது .  இந்த வைரஸ்  நாளடைவில் சர்வதேச அச்சுறுத்தலாக  மாறிவருகிறது,  இந்நிலையில் வைரஸ்  தாக்குதல் அதிகம் உள்ள வுஹான் நகருக்கு கல்வி ,  வேலைவாய்ப்பு ,  தொழில் நிமித்தமாக ,  இந்தியர்கள் பலர் சென்றுள்ளனர் . இந்நிலையில் கொரோனா பரவியதால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்தியா இறங்கியது .  இந்நிலையில் முதற்கட்டமாக மத்திய அரசின் ஏர்-இந்தியா சிறப்பு விமானம்  வுஹான் நகருக்கு சென்று சுமார்  324 இந்தியர்களை டெல்லிக்கு அழைத்து வந்தது.   அதன் பின்னர் இரண்டாவது விமானத்தை அனுப்பி மேலும் 300 பேர் மீட்கப்பட்டனர். 

 

இதனையடுத்து நாடு திரும்பி அனைவரும் சிறப்பு  மருத்துவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து  நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .  இந்நிலையில் மேலும் வுஹான் நகரில் சிக்கியுள்ள 80க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர் .  தற்போது அவர்களை மீட்டு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது . இந்நிலையில்  சீனாவுக்கு மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையில் மிகப்பெரிய ராணுவ விமானம் வுஹான் நகருக்கு  செல்கிறது . இந்த விமானத்தைப் பயன்படுத்தி அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் நாடு திரும்பலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது .  மேலும் மீதமுள்ளவர்களை அழைத்துவர தனி விமானம் ஒன்றும் நாளை செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது .

click me!