இந்த வைரஸ் சீனாவில் மட்டுமல்லாது ஜப்பான் , ஹாங்காங் , பிலிப்பைன்ஸ் , சிங்கப்பூர் , அமெரிக்கா , ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 20 க்கும் அதிகமான நாடுகளில் பரவி இந்த வைரஸ் சர்வதேச அச்சுறுத்தலாக மாறியுள்ளது .
கொரோனா வைரஸ் தாக்குதல் முன்பைப் போல் இல்லாமல் வெகுவாக குறைந்துள்ளதாக சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது . வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது . கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவியுள்ளது . இந்த வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2118 பேர் உயிரிழந்துள்ளனர் சுமார் 74 ஆயிரத்து 576 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
இதுவரையில் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இது வேகமாக பரவி வருகிறது , வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருவதுடன் வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது . அந்நாட்டு மருத்துவர்களும் இரவு பகல் பாராமல் மருத்துவச் சேவையாற்றி வருகின்றனர் . இந்த வைரஸ் சீனாவில் மட்டுமல்லாது ஜப்பான் , ஹாங்காங் , பிலிப்பைன்ஸ் , சிங்கப்பூர் , அமெரிக்கா , ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 20 க்கும் அதிகமான நாடுகளில் பரவி இந்த வைரஸ் சர்வதேச அச்சுறுத்தலாக மாறியுள்ளது .
இந்நிலையில் வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ குழுவுடன் சீன மருத்துவர்கள் ஆலோசித்தும் தீவிர ஆய்வும் நடத்தி வருகின்றனர் , இந்த நோய்க்கு இதுவரை முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை . இந்நிலையில் வைரஸ் தாக்குதல் முன்பைப்போலில்லாமல் வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது , இந்த வைரஸின் வீரியம் குறையத்தொடங்கியுள்ளது என சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது . சீனாவின் இந்த அறிவிப்பு அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிடமும் கவனத்தை பெற்றுள்ளது.