ஜெர்மனியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர்.
ஜெர்மனி நாட்டின் ஹனாவ் நகரில் இருக்கும் பார் ஒன்றில் நேற்று பிற்பகலில் மர்ம நபர்கள் சிலர் அதிரடியாக நுழைந்தனர். பாரில் இருந்தவர்களை மிரட்டிய அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதே போல அருகே இருக்கும் மற்றொரு பாரில் வேறு சில மர்ம நபர்கள் நுழைந்து அங்கிருந்தவர்களையும் துப்பாக்கிகள் சுட்டுள்ளனர்.
இரு பார்களில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் 8 பேர் பலியாகினர். 5 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருத்தனர். துப்பாக்கியால் சுட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் குறித்த விபரங்கள் இதுவரையிலும் வெளிவரவில்லை. கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பயங்கரவாத நோக்கத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை முடுக்கி விட்டுள்ளனர். ஒரே நாளில் 8 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஜெர்மன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'3 சகாக்களை இழந்து நிற்கிறேன்'..! கண்ணீருடன் உருகிய கமல்..!