நடுவானில் விமானங்கள் நேருக்கு நேர் பயங்கர மோதல்..! 4 பேர் உடல் கருகி பலி..!

By Manikandan S R S  |  First Published Feb 19, 2020, 5:15 PM IST

ஆஸ்திரேலியாவில் நடுவானில் விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.


ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் அருகே இருக்கிறது மங்களூரு நகர். இங்கிருக்கும் விக்டோரியா கிராமப்பகுதியில் இன்று முற்பகலில் இரண்டு சிறிய ரக விமானங்கள் பறந்து சென்றன. எதிரெதிரே இரு விமானங்களும் வந்த நிலையில் எதிர்பாராத விதமாக இரண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக்கொண்டன. நாலாயிரம் அடி உயரத்தில் பறந்த நிலையில் இரண்டும் நடுவானில் மோதிக்கொண்டு தீப்பிடித்து எரிந்தது.

Latest Videos

விமானங்களின் அனைத்து பாகங்களும் நொறுங்கி வயல்வெளிகளில் சிதறி விழுந்தது. இரண்டு விமானங்களில் தலா இரண்டு பேர் பயணம் செய்த நிலையில் 4 பேரும் உடல் கருகி பலியாகினர். அந்த பகுதியில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்தவர்களின் விபரங்கள் முழுமையாக தெரியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

'தயவு செய்து கோவில் கொடைவிழாக்களில் தொந்தரவு செய்யாதீங்க'..! காவல்துறைக்கு எதிராக கொந்தளிக்கும் வைகோ..!

click me!