ஐநா பொதுச்செயலாளரை வளைத்த பாகிஸ்தான்...!! இந்தியாவுக்கு எதிராக கச்சிதமாக காரியம் சாதித்த இம்ரான்கான்...!!

By Ezhilarasan Babu  |  First Published Feb 19, 2020, 1:17 PM IST

அப்போது அவரிடம் வலியுறுத்திய பாகிஸ்தான் எம்பிகள் ,  தற்போது போர் பதற்றம் நிலவும் சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தான் என இருதரப்பு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க முடியாது பதற்றமான இந்நிலையில் ஐநா சபை  தலைமையிலான பங்களிப்பு மிக முக்கியமானது என  வலியுறுத்தினர்.  


இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய ஐநா மன்றம் தயாராக உள்ளது என அதன் பொதுச்செயலாளர் ஆன்டனியோ  குட்டரெஸ் தெரிவித்துள்ளார் இது மீண்டும் இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது . காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடுகள் தலையிடுவதை இந்தியா அனுமதிக்காது என ஏற்கனவே இந்தியா அறிவித்துள்ள நிலையில் ஐநா மன்றம் இவ்வாறு  தெரிவித்திருப்பது இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது . 

Latest Videos

சமீபத்தில் பாகிஸ்தான் வந்திருந்த துருக்கி அதிபர் எர்டோகன் இதேபோன்ற கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு இந்தியா பதிலடி தெரிவித்தது.  இந் நிலையில் ஐநா பொதுச்செயலாளர் இவ்வாறு கூறியுள்ளார்,   ஐநா சபை பொது செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் பாகிஸ்தானில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ,  அந்நாட்டின் எம்பிகளை நேற்று முன்தினம் சந்தித்து பேசிய அவர்,   ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் படி இந்தியாவுடனான காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண பாகிஸ்தான் ஆதரவு அளித்ததற்குநன்றிஎனகூறினார்.  

அப்போது அவரிடம் வலியுறுத்திய பாகிஸ்தான் எம்பிகள் ,  தற்போது போர் பதற்றம் நிலவும் சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தான் என இருதரப்பு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க முடியாது பதற்றமான இந்நிலையில் ஐநா சபை  தலைமையிலான பங்களிப்பு மிக முக்கியமானது என வலியுறுத்தினர்.  அதற்கு அவருடன் பேசிய ஐநா சபையின் பொதுச் செயலாளர் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள காஷ்மீர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு ஐநா சபை மத்தியஸ்த செய்ய முடியும் என ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ  குட்டரெஸ்  தெரிவித்தார் .   ஆனால் காஷ்மீர் பிரச்சினையை மூன்றாவது தரப்பினர் தலையிட இடமில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் இந்தியா பாகிஸ்தான் என  இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே இதில்  தீர்வு காண முடியும் என்பது இந்தியாவின்  நிலைப்பாடாக உள்ளது .

 

click me!