இந்தியா பாகிஸ்தானுக்கிடையே 2025ல் அணு ஆயுத போர்...!! பன்னிரெண்டரை கோடி பேர் உயிரிழக்க வாய்ப்பு...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 19, 2020, 12:45 PM IST
Highlights

காஷ்மீரில் நடத்தப்படும்  ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது , அணுஆயுத நாடுகளான இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே ராணுவ மோதல் ஏற்படலாம் இரு நாடுகளிடமும் 100 முதல் 150 க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருக்கலாம் ,  

இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் ஏற்பட்டால் பன்னிரெண்டரை கோடி பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது ஜெர்மனி நடத்திய ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது .  கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமாவில்  துணை ராணுவ படையினர் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் துணை ராணுவப் படையினர்  40 பேரும் உயிரிழந்தனர் . இந்த தாக்குதல் நடந்த சில தினங்களில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பால்கோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம்களை குண்டு வீசி அழித்தது .

இதனை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது ,  அதேபோல் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து  பாகிஸ்தான் வெளிப்படையாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது,   தீவிரவாதிகள் துணையுடன் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது இந்நிலையில் ஜெர்மனியில் தி முனிச்  பாதுகாப்பு அறிக்கை 2020 என்ற ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது ,   இதில் கூறப்பட்டுள்ளதாவது :- புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது .  காஷ்மீரில் நடத்தப்படும்  ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது , அணுஆயுத நாடுகளான இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே ராணுவ மோதல் ஏற்படலாம் இரு நாடுகளிடமும் 100 முதல் 150 க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருக்கலாம் ,  

இருநாடுகளிடையே 2025 போர் நடந்தால் இந்த போரில் 15,000 டன் முதலில் லட்சம் டன் வரையிலான ஆயுதங்கள் பயன்படுத்தப் படலாம் , இதனால் ஒரு கோடியே 60 லட்சம் டன் முதல் 3 கோடியே 60 லட்சம் டன் வரையில் கருப்பு கார்பன் புகை வெளியாகும் ,  சூரிய ஒளியின் அளவு 20முதல் 35 சதவீதம் குறையும் ,  நிலத்தின் பயிர் உற்பத்தி திறன் 15 முதல் 30 சதவீதம் பாதிக்கும் ,  கடல் உற்பத்தி 5 முதல் 15 சதவீதம் குறையும் , இது அனைத்துக்கும் மேலாக மனித உயிரிழப்பை பொருத்தமட்டில் ஐந்து கோடி முதல் பன்னிரெண்டரை கோடி வரை உயிரிழப்புகள் நேரிடும் ஆபத்து உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
 

click me!