சீனாவுக்கு போக எல்லா நாடும் பயப்படும்போது... தைரியமா கெத்தா மருந்து கொண்டு செல்கிறது இந்தியா.!! நண்பேன்டா..!!

By Ezhilarasan BabuFirst Published Feb 18, 2020, 3:48 PM IST
Highlights

மருந்து பொருட்களுடன் இந்திய விமானம் இவ்வார இறுதியில் சீனாவின் வுகான் நகருக்கு செல்கிறது . இத்தகவலை இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது 

சீனாவில் கொரோனா வைரஸ்  பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில் அதை ஒடுக்குவதற்கான மருந்து பொருட்களுடன் இந்திய விமானம் சீனாவுக்கு  விரைகிறது கொரோனா  வைரஸை கட்டுப்படுத்துவதற்கான மருந்து பொருட்களுடன் இந்தியா விமானம் இவ்வார இறுதியில் சீனாவின் வுகான் நகருக்கு செல்ல உள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது .  கடந்த டிசம்பர் மாதம் வுகானில்  தோன்றிய கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும் பரவி உள்ளது . இந்த வைரசுக்கு இதுவரை சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

 

சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இந்த வைரஸ் சினாவையும் கடந்து சுமார் 23 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது .  உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது . இதுவரையில் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை ,  இதனால் இந்த வைரஸ் கட்டுப்பாடின்றி மிக வேகமாக பரவி வருகிறது .  இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா ,  ஆஸ்திரேலியா ,  சீனா ,  ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன .  இந்நிலையில் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த கேரளத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் கொரோனா  வைரஸ் காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ளனர் .  

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவுவதாக  இந்தியா ஏற்கனவே உறுதி அளித்திருந்தது . அதனடிப்படையில் கொரோனா வைரஸை ஒடுக்குவதற்கான மருந்துகளை சீனாவுக்கு இந்தியா அனுப்பி வைக்க உள்ளது .  மருந்து பொருட்களுடன் இந்திய விமானம் இவ்வார இறுதியில் சீனாவின் வுகான் நகருக்கு செல்கிறது .  இத்தகவலை இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது .  சீனாவில் இருந்து இந்தியா திரும்பி வரும்போது விமானத்தில் இடவசதி உள்ளதை பொறுத்து  அங்குள்ள இந்தியர்கள் இந்த வாமானத்தில் அழைத்து வரப்படுவார்கள் என இந்திய தூதரகம் கூறியுள்ளது .

 

click me!