என்ஆர்சி பணிகள் ஏப்ரல் 1ம் தேதி தொடக்கம்... குடியரசு தலைவர் முதல் நபராகப் பதிவு செய்கிறார்..!

By Asianet Tamil  |  First Published Feb 18, 2020, 1:32 PM IST

தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்ஆர்சி) பணிகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்குகிறது. குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் முதல் குடியிருப்பாளராக தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் தனது விவரங்களை பதிவு செய்கிறார்.
 


தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்ஆர்சி) பணிகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்குகிறது. குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் முதல் குடியிருப்பாளராக தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் தனது விவரங்களை பதிவு செய்கிறார்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது நாட்டில் வழக்கமாக குடியிருப்போர் தொடர்பான விவரங்களை பராமரிக்கும் பதிவேடாகும். கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்செக்ஸ் 2021 மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 பணிகளுக்காக நிதி கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேடு பணிகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது.

Latest Videos

ஆனால், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தங்களது மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேசமயம், தேசிய மக்கள்தொகை பதிவேடு மேம்படுத்துதல் பணிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி தேசிய மக்கள்தொகை பதிவேடு மேம்படுத்துதல் பணிகள் புதுடெல்லி மாநகராட்சி பகுதியில் தொடங்குகிறது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு செயல்முறையை வழக்கமாக குடியரசு தலைவர் தொடங்கி வைப்பார்  என்பதால், பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் அலுவலகம்  தேசிய மக்கள்தொகை பதிவேடு பணி தொடக்க நாளை பிரம்மாண்டமாக செய்ய விரும்புகிறது. ஏப்ரல் 1ம் தேதியன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடர்பான விவரங்களை தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்தபிறகு, அன்றைய தினமே துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வீடுகளுக்கு சென்று அவர்களது விவரங்களையும் பதிவு செய்ய அந்த அலுவலகம் முடிவு செய்துள்ளது.

click me!