பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசுகையில், ’’பாகிஸ்தானை அழித்து ஒழிக்க, இந்திய ராணுவத்துக்கு, 11 நாட்கள் போதும்' என, அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பேசினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசுகையில், ’’பாகிஸ்தானை அழித்து ஒழிக்க, இந்திய ராணுவத்துக்கு, 11 நாட்கள் போதும்' என, அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பேசினார்.
மக்கள் தொகை அதிகம் கொண்ட, அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு நாட்டின் பிரதமர், இப்படி பொறுப்பற்ற முறையில் பேசக் கூடாது. ஹிந்துத்வா கொள்கையால், ஜம்மு - காஷ்மீர் மக்களின் வாழ்க்கை, 200 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறது.இதே கொள்கையால், இந்தியாவில் வசிக்கும், 20 கோடி முஸ்லிம்களுக்கு எதிரான, பாரபட்சமான இரண்டு சட்டங்களை, பா.ஜ., அரசு வகுத்துள்ளது. இந்தியாவின் இது போன்ற கொள்கை முடிவுகளை, சர்வதேச சமூகங்கள் கவனிக்க தவறினால், அங்கு வசிக்கும் முஸ்லிம்கள், பாகிஸ்தானை நோக்கி நகரத் துவங்குவர். இது, பாகிஸ்தானில் மீண்டும் அகதிகள் பிரச்னையை உருவாக்கும்’’எனக் கதறியுள்ளார்.
இதற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.’’இம்ரான் கான் காரணமில்லாமல் கதறவில்லை. ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் இந்தியா இந்து நாடாக அறிவிக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறார். இராணுவம் என்பது எல்லைகளை காக்க மட்டுமல்ல, தேவைப்பட்டால் உள்நாட்டு பாதுகாப்பிற்கும் களமிறக்கப்படும் என்றார் அமித்ஷா. இவற்றின் பொருள் இப்பொழுது புரிகிறது. மூர்க்கர்களின் 800 ஆண்டுகால அட்டூழியங்கள் முடிவிற்கு வரப்போகிறது. பாஜக சரி செய்யப்போவது வெறும் 70 ஆண்டு கால பிழைகளை மட்டுமல்ல. இந்த புண்ணிய தேசத்தின் கலாச்சாரமும், பண்பாடும், மொழிகளும், இலக்கியங்களும், சுதந்திரமும், பல்வேறு வகையான வழிபாட்டு முறைகளும் காக்கப்படும்’’என ஒருவர் தெரிவித்துள்ளார்.
'’பாகிஸ்தானின் உண்மையான முகத்தை வெளிபடுத்தியது CAA மசோதா என்பதை இங்குள்ள எதிர்கட்சிகள் புரிந்து இனியாவது சுய ஓட்டு வங்கி போராட்டங்களை தவிர்க்க வேண்டும். ஓட்டு மொத்த மக்களும் இந்த அந்நிய கைக்கூலிகள் யார்யார் என கவனிக்கிறார்கள். இத்தனை சாதுர்யமாக கொண்டுவந்த ஒரு மசோதாவால் பாகிஸ்தான் அலறித் துடிக்க வைத்துள்ளார் மோடி. இந்தியாவில் இருந்து வரும் முஸ்லீம் அகதிகளுக்கு குடியுரிமை கொடும்போம் என்று ஒரு சட்டம் போடுங்கள். எத்தனை பேர் பாகிஸ்தான் போகிறார்கள் என்று பாக்கலாம்’’எனக் கூறி வருகின்றனர்.