Latest Videos

நடுவில் நிற்கும் மோடி... கீழே இறங்கிய ஜோ பிடன்! ட்ரெண்டாகும் G7 பேமிலி போட்டோ!

By SG BalanFirst Published Jun 15, 2024, 3:28 PM IST
Highlights

ஜி7 உச்சி மாநாட்டின் குழு புகைப்படத்தில் மோடி நடுவில் நின்றுகொண்டிருப்பது இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

G7 உச்சி மாநாட்டையொட்டி, வெள்ளிக்கிழமை இத்தாலியின் அபுலியா நகரில் பிரதமர் மோடி பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். இந்தச் சந்திப்பின் முடிவில் தலைவர்கள் கூட்டாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் வோலோடிமியர் ஜெலென்ஸ்கி, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட குழு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில், பிரதமர் மோடி நடுவில் நின்றுகொண்டிருப்பது இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் காட்டுவதாக பாஜகவினரும் மோடி ஆதரவாளர்களும் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். இதனால், இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

வீட்டுக்கடன் EMI ல் சேமிப்பது எப்படி? ரூ.50 லட்சம் கடனை 10 வருடத்தில் தீர்க்க பக்கா பிளான்!

படத்தைப் பார்த்து கருத்து கூறிய ஒரு பயனர், "இந்தியா இப்போது உலகின் மையத்தில் உள்ளது" என்று மகிழ்ச்சி தெரிவித்தார். மற்றொருவர், "இது உங்கள் தலைமை மற்றும் கவர்ச்சியான ஆளுமையின் தாக்கம். இந்தியா G7 மாநாட்டின் ஒரு பகுதியாக இல்லை, நீங்கள் G7 உச்சிமாநாட்டில் மைய நிலையைப் பெற்றுள்ளீர்கள்" என்று கூறியுள்ளார்.

இன்னொரு மோடி ஆதரவாளர், பிரதமர் மோடி ஜி7 உச்சிமாநாட்டை அதிரவைத்திருப்பதாகத் தெரிவித்தார். "உலகில் எண்ணிலடங்கா மனிதர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே உலக வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள். அந்த சிலரில் ஒருவர் மட்டுமே தலைநிமிர்ந்து நிற்கிறார். மோடி இந்த நூற்றாண்டின் தனித்துவமான தலைவர். அவருக்குப் பின்னால் உலகமே அணி திரள்கிறது. நமது பாரத தேசம் தலை நிமிர்ந்து நிற்கிறது" என மற்றொரு மோடி அபிமானி கருத்து கூறியுள்ளார்.

எலெக்ட்ரிக் கார் ஓனர்களுக்கு குட் நியூஸ்! புதிதாக 5,000 சார்ஜிங் மையங்களை அமைக்கும் டாப் நிறுவனங்கள்!

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க அதிக கட்டணம்! இன்டர்சார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் ஆபரேட்டர்கள்!

click me!