Latest Videos

பெருவில் சீனாவின் பிரம்மாண்ட ஆழ்கடல் துறைமுகம்; அமெரிக்காவுக்கு செக் வைக்கும் பீஜிங்!!

By Dhanalakshmi GFirst Published Jun 15, 2024, 1:24 PM IST
Highlights

உலக பொருளாதாரத்தில் இன்றும் போட்டி போட்டுக் கொள்ளும் இரண்டு நாடுகள் அமெரிக்கா, சீனா. இந்த இரண்டு நாடுகளும் தங்களுக்குள் யார் உலக பொருளாதாரத்தையும், அரசியலையும் கட்டுப்படுத்துவது என்று காலம் காலமாக மோதிக் கொண்டு வருகின்றன.

அமெரிக்கா, சீனா இடையே பொருளாதார போட்டி உலக நாடுகளை உற்றுப் பார்க்க வைக்கிறது. தற்போது அமெரிக்காவின் பின் வாசலில் ஆழகடல் துறைமுகத்தை அமைத்து வெள்ளை மாளிகைக்கு  அதிர்ச்சியைக் கொடுக்க சீனா தயாராகிவிட்டது.

பெருவில் உள்ள சான்காயில் ஆழ்கடல் துறைமுகத்தை சீனா கட்டி வருகிறது. துவக்கத்தில் இந்த துறைமுகம் சீன அரசின் கீழ் வரும் காஸ்கோ ஷிப்பிங்கிற்குச் சொந்தமானது மற்றும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வந்தது. நடப்பு 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த துறைமுகம் முடிக்கப்பட்டு, சீன அதிபர் ஜி ஜின்பிங் கையால் திறந்து வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும்போது, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவுக்கு கடல் வழி போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும். சீனாவிற்கு சோயா, மக்காச்சோளம் மற்றும் தாமிரம் போன்ற பொருட்களை கொண்டு செல்வதற்கான நேரமும் குறையும். 

உலகின் டாப் 10 பணக்கார பெண்கள்.. இந்தியாவின் சாவித்ரி ஜிண்டாலுக்கு எந்த இடம்?

பெருவிற்கும் சீனாவிற்கும் இடையே நேரடியாக பெரிய சரக்கு கப்பல்களை கையாளும் துறைமுகத்தின் திறன் வர்த்தகத்தின் போக்கை மாற்றக் கூடும் என்று அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இதனால் தென் அமெரிக்க வளங்களை பிரித்தெடுப்பதையும், கட்டுப்படுத்துவதையும் சீனா தன்னகத்தே எளிதாக்கிக் கொள்ளும் என்றும் அமெரிக்கா கருதுகிறது. மேலும். இப்பகுதியில்  வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதார செல்வாக்கு குறித்தும் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது. 

இந்த துறைமுகத்தை ராணுவ நோக்கத்திற்காக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு எழுந்துள்ளது. இந்த துறைமுகம் ராணுவத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அந்த நாட்டின் ராணுவமும் கவலை தெரிவித்துள்ளது. 

சான்காய் துறைமுகமானது பெருவை ஒரு முக்கிய வணிக மையமாக மாற்றும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இது பெருவிலிருந்து மட்டுமின்றி பிரேசில் போன்ற பிற தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும் பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவுகிறது. உலக வல்லரசுகளிடையே புதிய போர்க்களமாக மாறியுள்ள லத்தீன் அமெரிக்காவுடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த சீனாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற கருத்தும் எழுந்துள்ளது. 

கம்மி விலையில் இலங்கையை பேமிலியோடு சுற்றிப்பாருங்க.. பட்ஜெட் டூர் பேக்கேஜ் விலை எவ்வளவு தெரியுமா?

சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் குறித்து அமெரிக்கா கவலைப்பட்டால், அது பிராந்தியத்தில் தனது சொந்த முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பெரு நாட்டு அதிகாரிகள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். லத்தீன் அமெரிக்காவின் உள்கட்டமைப்பு நிதியில் பற்றாக்குறை  ஏற்பட்டுள்ள காரணத்தால் நிதி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக சீனாவை அதிகளவில் எதிர்பார்த்து இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை சீனாவும் அபகரிப்பதற்கு களத்தில் இறங்கியுள்ளது.

click me!