குவைத் நாட்டில் கேரளா தொழிலதிபருக்குச் சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 தமிழர்கள் உட்பட 41 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஆபிரகாம் என்ற தொழில் அதிபருக்கு குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மங்கப் நகரில் சொந்தமாக 6 அடுக்குகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 6 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் கீழ் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தானது மளமளவென கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
கள்ளக்காதலனை பெண்களுடன் நெருக்கமாக பழகவிட்டு பணம் பறித்த இளம்பெண்; ஜிம்முக்குள் ஹைடெக் மோசடி
undefined
அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டும், தீயில் கருகியும் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 2 தமிழகர்கள், கேரளாவைச் சேர்ந்த இருவர் என மொத்தமாக 4 இந்தியர்கள் உள்பட 41 பேர் உடல் கருகியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி? அன்புமணி ராமதாஸ் பதில்
விபத்து நடந்த இடத்தில் அந்நாட்டு துணை அதிபர், ஆளுநர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதனிடையே கட்டிடத்தின் உரிமையாளரான ஆபிரகாமை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 22 நபர்கள் படுகாயமடைந்த நிலையில், மொத்தமாக 40 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.