பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் சந்திக்க உள்ளனர்.
பிரிட்டனின் புதிய பிரதமர் ரிஷி சுனக் பொறுப்பேற்ற பின் அவரிடம், பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தொலைப்பேசி வாயிலாக உரையாடினார். இதை இரு நாட்டு தலைவர்களும் ட்விட்டரில் பகிர்ந்தனர். தொலைப்பேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ரிஷி சுனக்கிடம் இன்று பேசியதில் மகிழ்ச்சி.
இந்திய பிரதமர் மோடி:
பிரிட்டன் பிரதமராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இரு நாட்டின் உறவையும் வலுப்படுத்தும் விதமாக இணைந்து செயல்படுவோம். இரு நாட்டிற்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என இருவரும் முடிவெடுத்துள்ளோம் என்று பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க..கோவையில் முழு அடைப்பு! நாங்கள் சொல்லவே இல்லை!..நீதிமன்றத்தில் பல்டி அடித்த அண்ணாமலை
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்:
பிரதமர் மோடியின் பதிவுக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ள ரிஷி சுனக், ‘எனது புதிய பணியை தொடங்கிய தருணத்தில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி. இரு நாடுகளுக்கும் இடையே பகிர்வதற்கு பல அம்சங்கள் உள்ளன. இரு சிறந்த ஜனநாயகங்களும் பாதுகாப்பு, ராணுவம், பொருளாதார கூட்டுறவு ஆகியவற்றை இணைந்து மேம்படுத்த ஆர்வத்துடன் உள்ளேன்’ என்றார்.
ஜி-20 உச்சி மாநாடு:
இந்நிலையில் இந்தோனேசியாவின் பாலியில் நவம்பர் மாத இடையில், நடைபெறும் ஜி-20 தலைமை உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொள்ள உள்ளனர். 10 டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட அறிக்கையின்படி, ‘உலகின் வளரும் பொருளாதாரங்களை வலுப்படுத்த இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளாக ஒன்றிணைந்து செயல்பட தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் இங்கிலாந்தும், இந்தியாவும் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க..கோடநாடு எஸ்டேட் கொலை & கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்! சிபிசிஐடி போலீசார் எடுத்த அதிரடி முடிவு