அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டர் தலைமை அலுவலகத்துக்குள் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சமையலறை சிங்குடன் நுழைந்தவீடியோவால் நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டர் தலைமை அலுவலகத்துக்குள் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சமையலறை சிங்குடன் நுழைந்தவீடியோவால் நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ட்விட்டர் சமூக வலைதளத்தை 44,000 கோடி டாலருக்கு வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்: பராக் அகர்வால், விஜயா கடே நீக்கி அதிரடி
ஆனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் திடீரென தெரிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தில் ஏராளமான போலிக் கணக்குகள் இருப்பதால், அதுதொடர்பாக தகவல்கள் தேவை என்று எலான் மஸ்க் கோரியிருந்தார்.
ஆனால், ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்குடனான ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டதேத்தவிர அந்தவிவரங்களை வழங்கவில்லை. இதனால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது நீதிமன்றத்தில் இழப்பீடு வழக்குத் தொடர்ந்திருந்தது.
Entering Twitter HQ – let that sink in! pic.twitter.com/D68z4K2wq7
— Elon Musk (@elonmusk)இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை 44பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கிவிட்டார் என்று தி நியூ யார்க் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது. அதுமட்டும்லலாமல் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய சிஇஓ பராக் அகர்வால், சட்டஅதிகாரி விஜயா கடே,தலைமை நிதி ஆதிகாரி நெட் செகால் ஆகியோரையும் பணியிலிருந்து எலான் மஸ்க் நீக்கியதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டர் தலைமை அலுவலகத்துக்குள் சமையலறை சிங்கை தூக்கிக்கொண்டு எலான் மஸ்க் நுழைவது போன்ற வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரூபாய் நோட்டில் கடவுள் விநாயகர், லட்சுமி! பொருளாதாரம் வளர மோடிக்கு கெஜ்ரிவால் யோசனை
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிவிட்டதை உறுதி செய்யும் விதத்தில், எலான் மஸ்க் தனது ட்விட்டர் ப்ரோபைலில் “சீப் ட்விட்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில் குறிப்பிடுகையி்ல் “ ட்விட்டர் தலைமை அலுவலகத்துக்குள் நுழைகிறேன், அதை மூழ்கடிப்போம்” எனத் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் 75 சதவீதம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் கூறியதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
உலகை ஆளும் இந்தியர்கள் ! முக்கிய நிறுவனங்களை வழிநடத்தும் இந்தியர்கள் குறித்த பார்வை
எலான் மஸ்க் பதிவிட்ட வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறுவிதமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். ட்விட்டர் நிறுவனமும் எலான் மஸ்க் தங்கள் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்திருந்தார் என்பதை உறுதி செய்துள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காக வந்திருந்தார் என்பதை தெரிவிக்கவில்லை.