சீனாவில் இரண்டாவது நோய்தொற்று அலை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கூறியதாவது:-
மற்ற எந்த பெரிய நாடுகளையும்விட உலகளவில் covid-19 எதிராக அமெரிக்கா மிக சிறப்பாக செயல்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அதே நேரத்தில் இந்த நோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா மிகப்பெரிய பிரச்சினையை எதிர் கொள்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். சீனாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சராசரியாக குறைந்தது நாளொன்றுக்கு 52,050 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இந்தியாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 55 ஆயிரத்து 745 பேர் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் சீனாவிலும் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
சீனாவில் இரண்டாவது நோய்தொற்று அலை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கூறியதாவது:- கொரோனா வைரஸ் விவகாரத்தில் மற்ற நாடுகளைவிட நாங்கள் மிக சிறப்பாக செயல்படுகிறோம் என்று நினைக்கிறேன். மற்ற நாடுகளை காட்டிலும் நாங்கள் இதில் பல நல்ல விஷயங்களை செய்துள்ளோம் என்று கருதுகிறேன். உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கவனித்தால் உங்களுக்கு தெரியும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க மிக சிறப்பாக செயல்படுகிறது என்ற அவர் செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், இந்தியா மற்றும் சீனாவை தவிர மற்ற நாடுகளை விட நாங்கள் மிகப் பெரியவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். சீனாவில் பெரிய அளவில் தொற்று நோய்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவும் மிகப்பெரிய பிரச்சனையில் உள்ளது. அதே போல் மற்ற நாடுகளிலும் இந்தப் பிரச்சினை அதிகரித்துள்ளது.
இதையெல்லாம் நான் மாலை செய்திகளில் கவனித்தேன், சாதாரணமாக இதிலிருந்து கடந்து விடலாம் என நினைத்த பலநாடுகள் எவ்வளவு பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகிறது என்பதை நாம் பார்க்க முடிகிறது. இந்த உலகளாவிய தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா, 47 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.55 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 60 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு பரிசோதனைகள் செய்யப்படவில்லை. பல சந்தர்ப்பங்களில் 50 சதவீத நோயாளிகளுக்கு விரைவான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதாவது 5 முதல் 15 -20 நிமிடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு உடனே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதுபோன்ற கிட் வேறு யாரிடமும் இல்லை, அமெரிக்காவில் மட்டுமே உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் கொரோனாவுக்கு எதிரான களத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.