கொரோனா வைரசுக்கான சரியான மருந்து ஒருபோதும் கிடைக்கப்பெறாமலும் கூட போகலாம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கான சரியான மருந்து ஒருபோதும் கிடைக்கப்பெறாமலும் கூட போகலாம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகளில் பரவி இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 4,862,285 பாதிப்புகளுடன் அமெரிக்கா உள்ளது. 18,84,051 பாதிப்புடன் பிரேசில் 2வது இடத்திலும், 1,858,689 பாதிப்புடன் இந்தியா 3வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில், காணொலி காட்சி மூலமாக செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரொஸ் அதானோம் கூறுகையில்;- நோய்த்தொற்று தடுப்பிற்கான சில மருத்துகள் 3ம் கட்ட பரிசோதனையில் இருந்தாலும் தற்போதைக்கு அவை துல்லியமான தீர்வுகளை தரக்கூடியதாக இல்லை என தெரிவித்துள்ளார்.
கொரோனாவிற்கு ஒருபோதும் சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க், தனிமனித இடைவெளி, கைகளைசுத்தமாக கழுவுதல், பரிசோதனை ஆகியவற்றை கடுமையாக அமல்படுத்த உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாஸ்க் அணிவது கொரோனா வைரசுக்கு எதிராக உலகளாவிய ஒற்றுமையின் அடையாளமாக மாற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.