கடந்த 2022ம் ஆண்டில் அதிகரித்த திருமணங்கள்! குறைந்த விவாகரத்துகள் - சிங்கப்பூர்!

By Dinesh TG  |  First Published Jul 26, 2023, 4:26 PM IST

சிங்கப்பூரில் கடந்த 2022ம் ஆண்டு மொத்தம் 29,389 திருமணங்கள் பதிவாகியுள்ளன என அந்நாட்டு திருமண பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
 


சிங்கப்பூரில் திருமண பதிவு குறித்த தரவுகளை வெளியிடும் நடவடிக்கை 1961ம் ஆண்டு முதல் தொடங்கியது. 2021ம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் திருமணப் பதிவு எண்ணிக்கை 3.7 சதவீதம் அதிகம். 2021ல் 28,329 திருமணங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டுக்கான திருமண பதிவு மற்றும் விவாகரத்து குறித்த தகவல்களை புள்ளிவிவரத் துறை கடந்த புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி, கடந்த 2022ம் ஆண்டில் குறைவான விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மொத்தம் 7,107 ஜோடிகள் பல்வேறு காரணங்களால் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு விவாகரத்து பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2021ம் ஆண்டைவிட 9.9 சதவீதம் குறைவாகும்.

சிங்கப்பூரில் அந்நாட்டினர் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் வயது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக, அறிவியர் மற்றும் மன ரீதியாக கருவளர்ச்சி விகிதம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை இது பாதிக்கிறது.

கடந்த 2022ல் திருமணம் செய்த ஆண்களின் சராசரி வயது 30.7ஆகப் பதிவாகியுள்ளது. ஆனால், 10 ஆண்டுகளுக்குமுன் அது 30.1ஆக இருந்தது. மணமகள்களின் சராசரி வயது 2022ல் 29.3 ஆக இருந்தது. அதே, 10 ஆண்டுகளுக்குமுன் அது 28ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2022ல் அதிகமானோர் திருமணம் செய்துகொண்டுள்ளதாக திருமண சேவை வழங்கும் நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உயரத்திலிருந்து வீசப்படும் குப்பை! - சாலையில் விழுந்தால் அபராதம்! தண்டனையும் காத்திருக்கு! எங்கு தெரியுமா?

Tap to resize

Latest Videos

click me!