ஜீப்ரா மீனை விண்வெளிக்கு அனுப்ப தயாராகும் சீனா.. எதற்காக தெரியுமா?

By Ramya s  |  First Published Jul 26, 2023, 2:30 PM IST

நுண் புவியீர்ப்பு விசையில் விண்வெளி வீரர்கள் எவ்வாறு எலும்புகள் இல்லாத உணர்வை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது.


விண்வெளி பற்றியும், மற்ற கிரகங்கள் குறித்தும் உலகின் பல நாடுகளும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சீனா ஒரு புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளது. அதாவது நுண் புவியீர்ப்பு விசையில் விண்வெளி வீரர்கள் ஏன் எலும்பு தேய்மானத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக சீனா தனது டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு ஜீப்ராஃபிஷ் என்ற மீனை (zebrafish) அனுப்ப தயாராக உள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு சிறிய மூடிய சுற்றுச்சூழல் அமைப்பில் மீன் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு இடையேயான தொடர்பு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, சிறிய மீன் இனங்கள் டியாங்காங்கின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படும் என்று சீன மனித விண்வெளி பொறியியல் விண்வெளி பயன்பாட்டு அமைப்பின் தளபதியின் உதவியாளர் ஜாங் வெய் கூறினார். 

முன்னதாக, விண்வெளி அரிசி "சியாவோய்", அரபிடோப்சிஸ் தலியானா "சியானான்" மற்றும் பல நூற்புழுக்களின் குழுக்கள் ஏற்கனவே சீன விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த சூழலில் ஜீப்ராஃபிஷ் மீன் மனித மரபணுக்களுடன் 87 சதவீதம் வரை ஒத்துப்போவதால் தற்போது அந்த மீனை விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப சீனா தயாராகி வருகிறது.

Tap to resize

Latest Videos

டியாங்காங் ஜீப்ராபிஷ் மீன்களுக்காக ஒரு விண்வெளி இல்லத்தை தயார் செய்துள்ளது. வென்டியன் ஆய்வக தொகுதியில் அமைந்துள்ள வாழ்க்கை சூழலியல் அறிவியல் பரிசோதனை அமைப்பு. இது ஒரு லிட்டர் நீர் கொண்ட ஒரு மூடிய “அக்வாரியம்” ஆகும், இது நான்கைந்து வரிக்குதிரை மீன்களையும், சில பாசிகள் மற்றும் நுண்ணுயிரிகளையும் இனப்பெருக்கம் செய்யக்கூடியது.ஒரு தானியங்கி உணவு சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.மீன் வளர்ச்சியைக் கண்காணித்து தானாகவே உணவளிக்கும் ஒரு அறிவார்ந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.  பரிசோதனையின் காலக்கெடு மற்றும் அதன் நீர்வாழ் கருவி பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த மீன் அனுப்பப்புடுவது இது முதன்முறையல்ல. 1976- ம் ஆண்டில் சோயுஸ் 21 பயணத்தில் சோவியத் ஒன்றியத்தின் சல்யுட் 5 விண்வெளி நிலையத்திற்கும் இந்த மீன் அனுப்பப்பட்டது. சோவியத் விண்வெளி வீரர்கள் மீனை வைத்து பல சோதனைகளை மேற்கொண்டனர், இந்த மீன் நுண் புவியீர்ப்பு விசையில் வாழ்வதற்கு பதிலளிக்கும் வகையில் சில நடத்தைகளை மாற்றியமைக்க தொடங்கியது என்று விண்வெளி வீரர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புறக்கணித்த பாலிவுட்.. தற்போது சீனாவில் பிரபல நடிகராக உள்ள இந்தியர்.. யார் இந்த தேவ் ரத்துரி?

click me!