தேவ் ரத்துரி 1976 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் மாவட்டத்தில் உள்ள கெம்சியா-சௌர் என்ற சிறிய கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள சியான் நகரில் 7ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் இந்தியர் ஒருவரைப் பற்றிய பாடம் உள்ளது. ஆனால் இந்தியாவில் பலருக்கும் தெரியாத இந்தியர். சீனாவுக்கு வந்த 18 ஆண்டுகளுக்குள் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்பு சீன உணவகங்களில் பணியாளராக பணிபுரிந்தார். பின்னர் அவர் உணவகங்களின் உரிமையாளரானார். இதற்கிடையில், அவர் சீனத் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து ஒரு ஹீரோவாக. யார் அந்த இந்தியர்? அவர் தான் தேவ் ரத்துரி (44).
தேவ் ரத்துரி 1976 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் மாவட்டத்தில் உள்ள கெம்சியா-சௌர் என்ற சிறிய கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். வறுமையின் காரணமாக 12 ஆம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது குடும்பத்தை நடத்துவதற்காக டெல்லிக்கு குடிபெயர்ந்தார். 1998 இல் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால் தேவ் ரத்தூரி பாலிவுட்டால் புறக்கணிக்கப்பட்டார். எனினும் டெல்லியில் சிறு சிறு வேலைகளை பார்த்த அவர் அங்கேயே தங்கினார். இதற்கிடையில், ப்ரூஸ்லீயால் ஈர்க்கப்பட்ட அவர் தற்காப்பு கலைகளை பயின்றார். 2005ல் சீனா சென்றார். அங்கு இந்திய உணவகத்தில் 10,000 ரூபாய்க்கு வெயிட்டர் வேலை கிடைத்தது.
வினோதமான முகமூடிகளை அணியும் சீனர்கள்.. சீனாவில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் - என்ன ஆச்சு?
இந்த நேரத்தில் அவர் சீன மொழியான மாண்டரின் மற்றும் சீன தற்காப்புக் கலையான ஷாலின் குங் ஃபூ ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். இரண்டு ஆண்டுகள் ஒரு ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்தார். 2007 இல், அவர் ஒரு ஜெர்மன் உணவகத்தில் மேலாளராக சேர்ந்தார். 2010 இல், அந்த ஹோட்டலில் பகுதி இயக்குநரானார். 2013 ஆம் ஆண்டில், அவர் தனது சொந்த உணவகத்தை சியான் நகரில் திறந்தார். 2016 இல் அஞ்சலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆரவ் அர்னவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.
தேவ்வின் நடிப்பு வாழ்க்கை 2017 இல் ஒரு சீன தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தொடங்கியது. தேவ் உணவகத்தில் ஒரு இயக்குனர் சாப்பிட வந்த போது, அவரிடம் தனக்கு நடிப்பில் உள்ள ஆர்வத்தை தேவ் தெரிவித்தார். பின்னர் அவர் சீன தொலைக்காட்சியில் Swat என்ற நிகழ்ச்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அவர் 35 க்கும் மேற்பட்ட சீன திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார்.
My Roommate Is a Detective (2020) என்ற சீன வலைத் தொடரில் தேவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தேவ் ரத்துரி இன்று சீனாவில் எட்டு உணவகங்களை வைத்திருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 150 பேர் இன்று தேவ்வின் சீன உணவகங்களில் பணிபுரிகின்றனர். தேவ் தனது உணவகங்களில் இந்திய கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்குவதன் மூலம் சீன மக்களுக்கு நாட்டின் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துகிறார். கோவிட் சமயத்தில் சீன மக்கள் அந்த அக்கறையை காட்டினார்கள் என்றும் தேவ் கூறுகிறார். "சீனா எனக்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது, கடந்த ஆண்டு எல்லைப் பிரச்சினையின் போது கூட சீன மக்களிடமிருந்து எந்த விரோதத்தையும் நான் எதிர்கொள்ளவில்லை" என்று தேவ் ரத்துரி கூறுகிறார்.
“என் காதலன் Happy-யா இருந்தா போதும்” சூனியம் வைக்க ஆபிஸில் இருந்து ரூ.5 கோடி பணத்தை திருடிய பெண்..