narendra modi: : பிரதமர் மோடிக்கு அமெரிக்கா பாராட்டு!ரஷ்யாவிடம் போர் நிறுத்தம் பற்றிய பேச்சுக்கு புகழாரம்

By Pothy RajFirst Published Sep 21, 2022, 6:53 AM IST
Highlights

உக்ரைனில் போரிடுவதற்கான நேரம் இதுவல்ல என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினிடம் பிரதமர் மோடி துணிச்சலாகப் பேசியது, மோடி எதில் நம்பிக்கை வைத்துள்ளாரோ அது சரியானதாகிறது. இதைஅமெரிக்கா வரவேற்கிறது என்று அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
 

உக்ரைனில் போரிடுவதற்கான நேரம் இதுவல்ல என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினிடம் பிரதமர் மோடி துணிச்சலாகப் பேசியது, மோடி எதில் நம்பிக்கை வைத்துள்ளாரோ அது சரியானதாகிறது. இதைஅமெரிக்கா வரவேற்கிறது என்று அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருக்கு இப்படி ஒரு அவமானமா ! சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்த ரஷ்ய அதிபர் புதின்

உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது, “ உக்ரைனில் போர் செய்வதற்கு ஏற்ற சகாப்தம் இதுவல்ல. அமைதியின் வழியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல நாம் இருவருக்கும் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. 

பல பத்தாண்டுகளாக இந்தியாவும், ரஷ்யாவும் நட்புறவோடு வந்துள்ளன. இந்தியா, ரஷ்யா உறவுகள் குறித்து பலமுறை இருவரும் தொலைப்பேசியில் பேசியுள்ளோம்.உணவு, எரிபொருள், உரம், பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களைக் களைய வழிகளை நாம் தேட வேண்டும். உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை இந்தியாவுக்கு அனுப்ப உதவிய உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கு நன்றி”   என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பேசியது குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் நேற்று வாஷிங்டனில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இனி விசா இல்லாமலே ரஷ்யா போகலாம்.. இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன ரஷ்ய அதிபர் புடின்.!

ரஷ்ய அதிபரிடம் உக்ரைன் போர் குறித்து இந்திய பிரதமர் மோடி பேசியது, அவர் எதில் நம்பிக்கை வைத்துள்ளாரோ அது சரி என்பதை குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன். பிரதமர் மோடி பேசிய விதத்தை அமெரிக்கா வரவேற்கிறது, பாராட்டுகிறது.

ரஷ்யாவுடன் நீண்டகாலம் நட்பு வைத்திருந்தபோதிலும் பிரதமர் மோடி உக்ரைன் போர் குறித்த கருத்தை துணிச்சலாகக் கூறி, போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ரஷ்யா இந்த போரை முடித்துக்கொண்டு, உக்ரைனிடம் கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் அந்நாட்டிடமே ஒப்படைத்து, ஐ.நா. விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

இது அனைத்துநாடுகளுக்கான செய்தி. அமெரிக்கா, உக்ரைன், ரஷ்யா என எந்த நாடாக இருந்தாலும், தங்கள் அண்டை நாடுகளை படை வலிமை மூலம் கைப்பற்றக்கூடாது என்பதாகும். ரஷ்யா தனது போரை முடித்துக்கொண்டால் விரைவில் இரு நாடுகளிலும் அமைதி நிலவும்.” எனத் தெரிவித்தார்.

மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் இந்தியா கவனம்: ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

இதற்கிடையே ரஷ்ய அதிபரிடம் போர் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்று பிரதமர் மோடி பேசியதை அமெரிக்க ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. சிஎன்என், வாஷிங்டன் போஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு ஆகியவை பிரதமர் மோடியைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன

click me!