மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! அலறியடித்துக் கொண்டு பொதுமக்கள் சாலையில் தஞ்சம்! சுனாமி எச்சரிக்கை.!

By vinoth kumarFirst Published Sep 20, 2022, 8:59 AM IST
Highlights

மெக்சிகோவின் மத்திய பசிபிக் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியுள்ளது. 

மெக்சிகோவின் மத்திய பசிபிக் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியுள்ளது. 

வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:05 மணிக்கு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும், சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் முழு சேத விவரம் வெளியாகாத நிலையில் மன்சானிலோவில் ஒரு வணிக வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

click me!