இஸ்ரேல் இதை நிறுத்தினால்.. அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் தயார்.. வெளியான புதிய தகவல்..

By Ramya sFirst Published Oct 18, 2023, 12:13 PM IST
Highlights

இஸ்ரேல் மீது பயங்கரத் தாக்குதலை நடத்திய ஹமாஸ் குழு, பணயக் கைதிகள் அனைவரையும் நிபந்தனையுடன் விடுவிக்க முன்வந்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் கடந்த 10 நாட்களுக்கு நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் மீது பயங்கரத் தாக்குதலை நடத்திய ஹமாஸ் குழு, பணயக் கைதிகள் அனைவரையும் நிபந்தனையுடன் விடுவிக்க முன்வந்துள்ளது. காஸா மீதான வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால், அனைத்து பொதுமக்களையும் பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக NBC நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இஸ்ரேலியப் படைகள் காஸா பகுதியில் இராணுவத் தாக்குதலை நிறுத்தினால், ஒரு மணி நேரத்திற்குள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அதிகாரி தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முன்னதாக நேற்று காஸா நகர மருத்துவமனை மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலின் இராணுவம் பொறுப்பேற்க மறுத்துவிட்டது. பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் இராணுவக் குழு ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததால் மருத்துவமனை  மருத்துவமனை தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. 

தங்களிடம் உள்ள உளவுத்துறை தகவல்களின்படி, மருத்துவமனையைத் தாக்கிய தோல்வியுற்ற ராக்கெட் ஏவுதலுக்கு இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு" என்று இஸ்ரெலிய ராணுவமும் தெரிவித்துள்ளது.

காஸாவில் உள்ள "காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகள்" மருத்துவமனையைத் தாக்கினார்கள், இஸ்ரேலின் இராணுவத்தை அல்ல என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

Egypt Gaza border crossing: இஸ்ரேல் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; காத்திருக்கும் அதிர்ச்சி!!

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் செவ்வாயன்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேலுக்கு புறப்படுவதற்கு முன்பு, அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் “ "காஸாவிலுள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட பயங்கர உயிர் சேதம் குறித்து நான் ஆத்திரமும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன். இந்தச் செய்தியைக் கேட்டவுடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் பேசினேன். சரியாக என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களைத் தொடர்ந்து சேகரிக்குமாறு எனது தேசிய பாதுகாப்புக் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

முன்னதாக அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதல்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து போர் தொடங்கிவிட்டதாக அறிவித்த இஸ்ரேல் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரை இந்த தாக்குதல்களில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே 200 முதல் 250 இஸ்ரேலியர்கள் பணயக்கைதிகளாக காஸாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதை தொடர்ந்து ஹமாஸை ஒழிப்பதற்கான இஸ்ரேலிய அழைப்புகளுக்கு ஜோ பிடென் ஆதரவளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!