எல்லாரும் அவங்கள உத்து பாருங்க.. புகைபிடிப்பவர்களை கட்டுப்படுத்த புதிய வழி சொன்ன சுகாதார செயலாளர்!

By Ansgar R  |  First Published Jul 17, 2023, 7:34 PM IST

பொதுவெளியில் புகை பிடிப்பவர்களை போலீசார் பிடிப்பது கடினமாக உள்ளதால் பொதுமக்களும் இதற்கு உதவ வேண்டும்


குடிப்பழக்கம் நேரடியாக குடிப்பவர்களை தாக்கும், மேலும் மறைமுகமாக அவர்களுடைய உறவுகளை தாக்கும். ஆனால் இந்த புகை பழக்கம், புகைபிடிப்பவர்களையும் தாக்கும், அருகில் நிற்பவர்களை அதை விட அதிகமாக தாக்கும். ஆகவே இப்படி பொது இடத்தில் புகைபிடிப்பவர்களை தடுக்க, ஒரு புதிய முயற்சியை கையாள சொல்லியுள்ளார் ஹாங் ஹாங் நகர சுகாதார செயலாளர்.

ஹாங் ஹாங் நகரை புகையிலை இல்லாத நகரமாக உருவாக்குவது எப்படி என்ற கேள்விகளுக்குப் பதிலளித்த லோ சுங் மாவ், பொதுவெளியில் புகைப்பிடிப்பவர்களை போலீஸார் கொண்டு பிடிப்பது என்பது மிகக்கடினம் என்றார். ஹாங்காங்கில் தற்போது புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குவது குறித்து விவாதித்து வரப்படுவதாகவும் அவர் கூறினார். 

Tap to resize

Latest Videos

தற்போதைய விதிகளின்படி உணவகங்கள், பணியிடங்கள், மூடிய வகையில் உள்ள பொது இடங்கள் மற்றும் சில வெளிப்புற பொது இடங்களில் புகைபிடிப்பதை தடை செய்துள்ளோம் என்றார். பொதுவெளியில் புகை பிடிப்பவர்களை போலீசார் பிடிப்பது கடினமாக உள்ளதால் பொதுமக்களும் இதற்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். பொது இடத்தில் ஒருவர் புகைபிடிப்பதை நீங்கள் பார்த்தால், உடனே அங்குள்ள அனைவரும் புகைபிடிப்பவரை மட்டும் உற்று பார்க்க துவங்குங்கள்.

இரவு நேரத்தில் வானில் தெரிந்த சந்திரயான்-3: வைரல் புகைப்படம்! 

நிச்சயம் கொஞ்ச நேரத்தில் அவர் அசௌகர்யப்பட்டு புகைபிடிப்பதை நிப்பாட்டுவார் என்ற சிறப்பான தரமான யோசனை ஒன்றை கூறியுள்ளார். கேட்பதற்கு இது நகைச்சுவையாக இருந்தாலும், பொதுவெளியில் புகைபிடித்து பிறரை தொந்தரவு செய்பவர்களை, நாமும் தொந்தரவு செய்யலாமே என்று மக்கள் கருதுகின்றனர். 

ஹாங் ஹாங் நகரை பொறுத்தவரை தற்போதைய புகைபிடிக்கும் விதிகளை மீறினால் 1500 ஹாங் காங் டாலர் அபராதம் விதிக்கப்படும். இது இந்திய மதிப்பில் சுமார் 15000 ரூபாய். ஹாங்காங்கின் அரசாங்கம் பரிசீலித்து வரும் புதிய நடவடிக்கைகளில், ஒரு குறிப்பிட்ட வருடத்திற்குப் பிறகு பிறந்தவர்கள், புகையிலை பொருட்களை வாங்குவதைத் தடை செய்வதும் அடங்கும். மேலும் சிகரெட் பாக்கெட் மீதான வரியை கணிசமாக அதிகரிக்கவும் அந்நாட்டு அரசு ஆவணம் செய்து வருகின்றது.

வளர்ந்துவரும் நாடுகளில் இந்தியா தான் பெஸ்டு! கேபிடல் குழுமத்தின் கட்டுரையைப் பகிர்ந்த பிரதமர் மோடி

click me!