அமெரிக்காவில் மேரிலாண்டில் நடந்த ஏலத்தில் ஜெர்மன் முன்னாள் அதிபர் அடால்ஃப் ஹிட்லர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கைக்கடிகாரம் ஏலம் விடப்பட்டது.
அமெரிக்காவில் மேரிலாண்டில் நடந்த ஏலத்தில் ஜெர்மன் முன்னாள் அதிபர் அடால்ஃப் ஹிட்லர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கைக்கடிகாரம் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் அந்த கைக்கடிகாரம் இந்திய மதிப்பு ரூ.8.71கோடிக்கு(11 லட்சம் டாலர்) ஏலம் போனது. ஏலம் எடுத்தவர் பெயர், விவரங்கள் தெரியவில்லை.
ஹிட்லர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அந்தக் கைக்கடிகாரம் தி ஹூபர் நிறுவனம் 1930களில் தயாரித்தது. இந்தக் கைக்கடிகாரத்தில் ஸ்வஸ்திகா அடையாளமும், ஆங்கிலத்தில் ஏஹெச் என்ற எழுத்தும் பொறிக்கப்பட்டிருந்தன.
ஆனால், இந்த ஏலம் நடத்தக்கூடாது, ஹிட்லரின் பொருட்களை ஏலம் விடக்கூடாது என்று கூறி, 34 யூதத் தலைவர்கள் ஏல நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
sanjay raut news: பிடி இறுகுகிறது! சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது மும்பை போலீஸார் புதிய வழக்கு
பிரசெல்ஸைச் சேர்ந்த ஐரோப்பிய யூதர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராபி மெலானசிம் மார்கோலின் கடிதத்தில் கூறுகையில் “இந்த ஏலம், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, இரண்டு விஷயங்களைச் செய்கிறது: ஒன்று, நாஜிக் கட்சியின் சிந்தனைகளை வைத்திருப்போருக்கு ஆதரவளிப்பது.
இரண்டு: இனப்படுகொலை செய்த கொலையாளி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான ஒரு பொருளை ஹிட்லரையும் அவரின் சிந்தனைகளையும் நேசிப்பவருக்கு வழங்கும் வாய்ப்பை வழங்குதலாகும்” எனத் தெரிவதி்துள்ளார்
மேரிலாண்டில் உள்ள அலெக்சாண்டர் வரலாற்றுப் பொருட்கள் ஏல நிறுவனத் தலைவர் மிண்டி க்ரீன்ஸ்டீன் கூறுகையில் “ எங்களின் நோக்கம் வரலாற்றுப் பொருட்களை பாதுகாப்பதாகும்.
எங்களிடம் இருந்து வாங்கிச் சென்ற பலரும் அந்தப் பொருட்களை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறார்கள் அல்லது அவர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். நல்லதோ, கெட்டதோ வரலாற்றுப் பொருட்களை பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கைக்கடிகாரத்தின் கேட்டலாக்கில், 1933ம் ஆண்டு ஹிட்லருக்கு இந்த கைக்கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.அந்த ஆண்டுதான் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராகினார்.
குரங்கு அம்மைக்கு கேரளாவை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு… இந்தியாவில் பதிவானது முதல் மரணம்!!
பவாரியா மலையில், பிரெஞ்சு படைகளுக்கும், ஹிட்லருக்கும் இடையே நடந்த போரில், ஹிட்லரின் கைக்கடிகாரம் பறிக்கப்பட்டது. அதன்பின் கைக்கடிகாரம் மீண்டும் அவர் கைக்கு வந்தது. இது தவிர ஹிட்லர் பயன்படுத்திய கட்லெரி செட், சாம்பைன் மது அருந்தும் கிளாஸ் போன்றவையும் ஏலம் விடப்பட உள்ளன.