இலங்கை கொழும்பு அருகே துப்பாக்கிச்சூடு… ஒருவர் பலி… பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

By Narendran SFirst Published Jul 31, 2022, 8:31 PM IST
Highlights

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுக்குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

இலங்கை கொழும்பு அருகே கொட்டாஞ்சேனையில் வசிக்கும் 51 வயதுடைய நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுக்குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. கம்மத்தேகொட ரத்கம பகுதியில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர்  கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரத்கம, தெவெனிகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டுக்கு சென்ற பெண்..பேக்கை திறந்தபோது, அச்சச்சோ ! பரபரப்பு சம்பவம் !\

காயமடைந்தவர்கள் 47 மற்றும் 29 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய காவல்துறை அதிகரி நிஹால் தல்துவ,  சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவுள்ளது. மே மாதத்திலிருந்து 16 துப்பாக்கிச் சூடுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அண்மைக்காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் கொரோனா.. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு !

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்குக் காரணம். துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் தகவல்கள் கசிவதைத் தடுப்பதுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் தற்போது இருக்கும் பொலிஸாரை கருத்திற்கொண்டு தாமதம் ஏற்படலாம். எரிபொருள் நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் மோதல்களைத் தடுப்பதற்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றுகின்றனர். எவ்வாறாயினும், விசாரணைகள் விரைவில் முடிவடைந்து, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். 

click me!