அன்று டிரம்ப்... இன்று இவர்... ஹிலாரியின் நிர்வாண சிலையால் பரபரப்பு

First Published Oct 20, 2016, 4:53 AM IST
Highlights


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திடீரென வைக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் அரை நிர்வாக சிலையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஹிலாரியின் சிலையை வைத்த கலைஞருக்கும், அப்பகுதியைச் அமெரிக்க இந்திய பெண்ணுக்கும் இடையை கடும் வாக்குவாதம் நடந்ததையடுத்து, அந்த சிலை அகற்றப்பட்டது.

நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அதிபர் வேட்பாளர் ஹிலாரிகிளிண்டனின் அரைநிர்வான சிலை திடீரென வைக்கப்பட்டது. மேலாடையின்றி, வெள்ளை நிற உள்ளாடையுடன் ஹிலாரி நிற்கும் காட்சியும், ஆட்டின் கால்கள் பொருத்தப்பட்டும் சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அந்த சிலையின் கால்பகுதியில், ஹிலாரி தனது வெளியுறவு அமைச்சர் பதவிக் காலத்தில் அரசு மின் அஞ்சல்களை அழித்தது தொடர்பான வாசகங்கள் கொண்ட பிரசுரங்கள் கிடந்தன.

அப்போது அந்த சிலையைக் கடந்து சென்ற ஹிலாரியின் ஆதரவாளரும், அப்பகுதியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் அருகே ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் அந்த சிலையை கீழே சாய்த்து அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டார்.

இதைக் கண்டு அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும்  திகைத்து நின்றனர். அப்போது அந்த சிலையை வடிவமைத்த அந்தோனி சிசோலி(வயது27) என்பவர் அங்கு வந்து அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு அந்த பெண் தனது பெயர் நான்சி என்றும், அருங்காட்சியகம் அருகே பணியாற்றி வரும் அமெரிக்க இந்தியப் பெண் என்றும் தெரிவித்தார்.

“தான் பணியாற்றும் அலுவலகத்துக்கு அருகே இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. நான் இந்த சிலையை பார்க்க விரும்பவில்லை. இந்த சிலை மிகவும் ஆபாசமாக இருக்கிறது'' என்று நான்சி வாதம் செய்தார். மேலும், நான்சிக்கு ஆதரவாகவும் அப்பகுதி மக்கள் பேசினர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து வந்தனர். அந்தோனி என்பவரிடம் முறையான அனுமதி பெற்று சிலையை வைக்கப்பட்டதா? என போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அனுமதி பெறவில்லை என்றதும், அந்த சிலையை போலீசார் அங்கிருந்து அகற்றினர். ஏறக்குறைய காலை 6 மணியில் இருந்து 8.30 மணி வரை அப்பகுதி முழுவதும் ஹிலாரியின் சிலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நியூயார்க், மன்ஹாட்டன் உள்ளிட்ட பல நகரங்களில் குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் நிர்வானச் சிலை வைக்கப்பட்டது. டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் கூறும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், இனவாதத்தை தூண்டும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்டெக்ளீன்எனும் அமைப்பு இந்த சிலையை நிறுவியது, அதன்பின் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!