விடாது பெய்யும் பேய்மழை : 25 பேர் பலி..!!!

Asianet News Tamil  
Published : Oct 18, 2016, 05:26 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
விடாது பெய்யும் பேய்மழை : 25 பேர் பலி..!!!

சுருக்கம்

வியட்நாமில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 

வியட்நாமில் கடந்த புதன்கிழமையன்று வீசிய பெரும் புயலை அடுத்து, தொடர்ந்து Ha Tinh உட்பட 4 மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. நகரின் பல இடங்களும் வெள்ளக்‍காடாய் மாறியுள்ளன. சாலை போக்‍குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

Quang Binh மாகாணத்தில் மின்சாரம் தாக்‍கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். சுமார் 30 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

வியட்நாமுக்‍கு வந்த சுற்றுலாப் பயணிகளும் கனமழைக்‍கு அஞ்சி வீடுகளை விட்டு தங்கள் விடுதிகளில் முடங்கிக்‍ கிடக்‍கின்றனர். விமான சேவையும் பாதிக்‍கப்பட்டிருப்பதால், வியட்நாமில் மக்‍களின் இயல்பு வாழ்க்‍கை ஸ்தம்பித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!