நேருக்‍கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள் - 30 பேர் பலி

Asianet News Tamil  
Published : Oct 18, 2016, 05:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
நேருக்‍கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள் - 30 பேர் பலி

சுருக்கம்

பாகிஸ்தானில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 30 பேர் பலியாகினர். 50-க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் ஃபைசாலாபாத்திலிருந்து பவல்பூர் நோக்‍கி சென்று கொண்டிருந்த பேருந்தும், கராச்சியிலிருந்து ரஹிம் யார் கான் நகருக்‍கு சென்று கொண்டிருந்த பேருந்தும், நேருக்குநேர் மோதிக் கொண்டன.

பஞ்சாப் மாகாணம் அருகே நடைபெற்ற இந்த விபத்தில் 30 பேர் பலியாகினர். 50-க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

இதில் பலரது நிலைமை கவலைக்‍கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்‍கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. அதீத வேகமே இந்த விபத்துக்‍கு காரணமாக கூறப்படுகிறது.

பேருந்துகளை வெட்டி எடுத்த பின்னரே மீட்பு பணிகள் தொடங்கப்பட்டதாகவும், அந்த அளவுக்‍கு இரண்டு பேருந்துகளும் மோதியுள்ளதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!