தீபாவளி அலங்கார விரைவு ரயில்... இது நம் நாட்டில் அல்ல... சிங்கப்பூரில்...!!!

Asianet News Tamil  
Published : Oct 18, 2016, 05:05 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
தீபாவளி அலங்கார விரைவு ரயில்... இது நம் நாட்டில் அல்ல... சிங்கப்பூரில்...!!!

சுருக்கம்

சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களையும், இந்தியர்களின் கலாச்சாரத்தையும் ஆதரிக்கும் வகையில், சிங்கப்பூர் நில போக்குவரத்து அணையம் விரைவு ரயில் ஒன்றை இயக்கியது. இதனை சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் கா பூ வான் ரயிலைத் தொடங்கி வைத்தார். ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தது மட்டுமல்லாமல் அதில் பயணம் மேற்கொண்டார்.

தீபாவளி அலங்கார ரயில் முழுவதும் தீபாவளியை சித்தரிக்கும் வகையில் வண்ண விளக்குகள், மயில், தாமரை மலர்கள் வரையப்பட்டுள்ளது. இதுபோன்ற வண்ணங்களால், பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் உள்ளது. இந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது என்று ரயில் பயணி ஒருவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் அதிபர் துவக்கி வைத்த மின் விளக்கு அலங்காரங்கள், தீபாவளியைச் சித்தரிக்கும் பெரு விரைவு ரயில் என சிங்கப்பூர் தீபாவளியைக் கொண்டாடும் உற்சாகத்தில் உள்ளது.

PREV
click me!

Recommended Stories

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!