இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர்...!!!

Asianet News Tamil  
Published : Oct 18, 2016, 12:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர்...!!!

சுருக்கம்

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார்.

பிரக்ஸிட் ஓட்டெடுப்பை தொடர்ந்து பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் பதவி விலகினார். இதை தொடர்ந்து, தெரசா மே பிரதமராக கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார். 

இந்நிலையில், வரும் நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இந்தியா வர உள்ளார். தெரசா மே, ஐரோப்பிய கண்டத்தை தாண்டி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

அவருடன் சிறிய மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக குழுவினர் இந்தியா வருகின்றனர். டெல்லி வரும் தெரசா மே, பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார். தொடர்ந்து, டெல்லியில் இந்தியா - இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாட்டை இரு தலைவர்களும் துவக்கி வைக்க உள்ளனர் என கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!