how many ants live on earth:பூமியில் வாழும் எறும்புகள் எண்ணிக்கை தெரியுமா? பறவை, விலங்குகள் எடையைவிட அதிகமாம்!

By Pothy RajFirst Published Sep 26, 2022, 12:50 PM IST
Highlights

நாம் வாழும் இந்த  பூமியில் எத்தனை எறும்புகள் வாழ்கின்றன என்று என்றாவது நினைத்துப் பார்த்தது உண்டா. இது குறித்து ஏதாவது கற்பனையாவது செய்தது உண்டா.ஆனால், தோரயமாக எத்தனை எறும்புகள் வசிக்கின்றன என்பதுகுறித்து ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

நாம் வாழும் இந்த  பூமியில் எத்தனை எறும்புகள் வாழ்கின்றன என்று என்றாவது நினைத்துப் பார்த்தது உண்டா. இது குறித்து ஏதாவது கற்பனையாவது செய்தது உண்டா.ஆனால், தோரயமாக எத்தனை எறும்புகள் வசிக்கின்றன என்பதுகுறித்து ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற உயிரியியல்வல்லுநர் எட்வார்ட் ஓ வில்சன் தலைமையிலான குழுவினர், பூமியில் வாழும் எறும்புகள் எண்ணிக்கை குறித்தும், எடை குறித்தும் தோரமாயகக் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். 

ரஷ்யா, அமெரிக்காவுக்கு ஆப்பு.. சீனா அரசியல் சாசனத்தை மாற்றியவர் - யார் இந்த சீனா அதிபர் ஜி ஜின்பிங் ?

எறும்புகளின் எண்ணிக்கையும், அதன் எடையும் கேட்பவர்களுக்கும், இதைப் படிப்பவர்களுக்கும் பெரும் வியப்பாகத்தான் இருக்கப்போகிறது. உண்மையாகத்தான் சொல்கிறோம்…..!

இந்த பூமியில் 20ஆயிரம் லட்சம் கோடி எறும்புகள்(ஆங்கிலத்தில் 20குவாட்ரில்லியன் எண்ணிக்கையில், 20,000,000,000,000,000 கோடிக்கும் அதிகமான எறும்புகள் இருக்கின்றன. அதாவது 12 லட்சம் டன் ட்ரை கார்பன் எடைக்கு சமமாக எறும்புகள் இந்த பூமியில் வசிக்கின்றன. எறும்புகளின் எடை பூமியில் வாழும் பறவைகள், விலங்குகளின் ஒட்டுமொத்த எடையைவிட அதிகமாகும். 

இந்தியாவின் குரல் உலகளவில் கவனிக்கப்பட பிரதமர் மோடியே காரணம்! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

பூமியில் வாழும் மனிதர்களின் எடையில் 5-ல் ஒரு பங்கு எடையாக எறும்புகள் உள்ளன. எறும்புகள், பூச்சிகள்,சிறு ஊர்வன உயிரிகள் இந்த பூமியில் நிறைந்து கிடக்கின்றன. இயற்கையில் எறும்புகள் என்பது முக்கியமான ஒன்றாகும்.

மண்ணை காற்றோட்டமாக வைக்க எறும்புகள் உதவுகின்றன, விதைகளை சிதறடித்து,கரிமப்பொருட்களை உடைத்து, மற்ற விலங்களுக்கு வாழிடங்களுக்கு உருவாக்கி, உணவுச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படாமல் காத்து முக்கியப் பங்காற்றுகின்றன .

இந்த பூமியில் 15,700 வகையான பெயரிடப்படாத, பெயரிடப்பட்ட எறும்புகள், பூச்சியினங்கள் வசிக்கின்றன. ஆனால், பூமியில் சரியாக எத்தனை எறும்புகள் வாழ்கின்றன என்பதை உறுதியாகக் கூற முடியாது.

உலகம்முழுவதும் உள்ள ஆய்வாளர்களால், எறும்புகள் குறித்து 489 வகையான ஆய்வுகள் செய்து எங்கள் அறிக்கையில் எறும்புகள் எண்ணிக்கை குறித்து தோரயமாகக் குறிப்பிட்டுள்ளோம்.

சீனா அதிபர் ஜி ஜின்பிங் கைது? வீட்டு சிறையில் அடைப்பு? ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதா ? பரபரப்பு தகவல்

இதன்படி, பூமியில் 20ஆயிரம் லட்சம் கோடி எறும்புகள் வாழ்கின்றன. இது முந்தைய கணக்கீட்டைவிட 20 மடங்கு அதிகமாகும். எறும்புகளின் எடை என்பது 12 மில்லிடன் ட்ரை கார்பனுக்குச் சமமாகும். விலங்குகள், பறவைகளின் ஒட்டுமொத்த எடையைவிட அதிகம், பூமியில் உள்ள மனிதர்களின் ஒட்டுமொத்த எடையில் 20சதவீதம் உள்ளன.

இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!