கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்… போராட்டக்காரர்களை கலைக்க அதிரடி நடவடிக்கை!!

By Narendran S  |  First Published Sep 25, 2022, 10:23 PM IST

இலங்கையில் மீண்டும் போராட்டம் தலைதூக்கியுள்ள நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை அடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 


இலங்கையில் மீண்டும் போராட்டம் தலைதூக்கியுள்ள நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை அடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் பாதிப்புள்ளாகியுள்ளனர். மேலும் இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது. இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கையில் போராட்டக்காரர்கள் தங்களின் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.

இதையும் படிங்க: ரஷ்யா, அமெரிக்காவுக்கு ஆப்பு.. சீனா அரசியல் சாசனத்தை மாற்றியவர் - யார் இந்த சீனா அதிபர் ஜி ஜின்பிங் ?

Tap to resize

Latest Videos

இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பிறகு இலங்கையில் போராட்டங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இருந்தபோதிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையில் தற்போது மீண்டும் போராட்டங்கள் தலைதூக்கி உள்ளது.

இதையும் படிங்க: வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?

கொழும்பு நகரின் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வளையமாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கு அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் தொடங்கி உள்ளன. போராட்டக்காரர்கள் கொழும்பு சுகாதார அமைச்சக கட்டிடத்தின் அருகே பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சிதறி ஓடினார்கள். இதுதொடர்பாக 4 பெண்கள் உள்பட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

click me!