இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை மிகப்பெரிய தாக்குதலை நடத்தினார்கள். இதையடுத்து இஸ்ரேலும் பாலஸதீனிய ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரண்டு பக்கமும் தற்போது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை இரண்டு பக்கமும் 1,600க்கும் அதிகமானவர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். காசா நகருக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சேவைகளையும் தற்போது இஸ்ரேல் நிறுத்தி இருக்கிறது. இதையடுத்து, காசாவைச் சுற்றி இருக்கும் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் கொண்டு வந்துள்ளது. இஸ்ரேல் மக்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர்.
இவர்களை எந்த நேரத்திலும் கொல்லப்போவதாக ஹமாஸ் தீவிரவாதிகள் அறிவித்து வந்தனர். இந்த நிலையில், இஸ்ரேலைச் சேர்ந்த 40 குழந்தைகளை ஹமாஸ் தீவிரவாதிகள் கொன்று இருக்கும் செய்தி உலக நாடுகளை உலுக்கியுள்ளது.
இதையடுத்து, தெற்கு லெபனானில் இஸ்ரேல் இன்று இரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதால் அங்கிருக்கும் மக்கள் வெளியேறி வருகின்றனர். அமெரிக்க சிறப்பு அதிரடிப் படை தற்போது இஸ்ரேலுக்கு வந்துள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸாவில் நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டு உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இஸ்ரேல் விமானப்படைகள் காசா பகுதி மீது 50க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தி குடியிருப்பு வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை அழித்துள்ளன. வெளிப்படையாக, காசா பகுதிக்குள் பாலஸ்தீனியர்களை குறிவைப்பதற்கு இஸ்ரேலிய விமானப்படைகள் அதிகப்படியான சக்தியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காசா பகுதிக்குள் தாக்கப்பட்ட இலக்குகளில் பெரும்பாலானவை குடியிருப்பு வீடுகளாகும். மேலும் உயிரிழந்தவர்களில் இளம் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர் என்பது தெரிய வந்துள்ளது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் மரணம்.. பணியிடத்தில் ஏற்பட்ட சோகம்.. என்ன நடந்து? - MOM விசாரணை!