சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் மரணம்.. பணியிடத்தில் ஏற்பட்ட சோகம்.. என்ன நடந்து? - MOM விசாரணை!

By Ansgar R  |  First Published Oct 10, 2023, 5:08 PM IST

Singapore : சிங்கப்பூரில் 29 வயதான வங்காளதேச கட்டுமானத் தொழிலாளி ஒருவர், நேற்று அக்டோபர் 9ம் தேதி மதியம், சிங்கப்பூரின் செம்பவாங்கில் உள்ள HDB கட்டுமான தளத்தில் அசைவில்லாமல் கிடந்ததை கண்டு பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறுதியில் அவர் அருகில் சென்று பார்த்தபோது தான் அந்த வெளிநாட்டு தொழிலாளி இறந்துவிட்டது தெரியவந்துள்ளது.


ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (Singapore Civil Defence Force) அளித்த தகவலில், நேற்று திங்கள்கிழமை மாலை சுமார் 3 மணியளவில் மேற்கூறிய கட்டுமான தளத்தில் இருந்து உதவிக்கான அழைப்பு வந்ததை உறுதிப்படுத்தியது. SCDF அதிகாரிகள் அங்கு சென்றபோது ஒரு நபர் கீழே கிடந்துள்ளார், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். 

திங்கள்கிழமை பிற்பகல் கட்டுமான தளத்தில் ஒரு அபாயகரமான பணியிட சம்பவம் நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சகத்தின் (MOM) செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். கட்டிடத்தின் 10 வது மாடியில் இருந்த கட்டிடத் தொழிலாளி, ஒரு கிரேன் ஆபரேட்டருக்கு பொருள் கழிவு வாளியைத் தூக்க வழிகாட்டும் போது, ​​வாளி அசைந்து அவர் கீழே விழ காரணமாகியுள்ளது. 

Tap to resize

Latest Videos

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: அச்சத்தில் மலையாளிகள்!

"பொதுவான பாதுகாப்பு நடவடிக்கையாக, ரிகர்கள் மற்றும் சிக்னல்மேன்கள் போன்ற பளு தூக்கும் குழுவினர், தூக்கப்பட்ட சுமைகளின் பார்வைக் கோட்டைப் பராமரிக்க வேண்டும் மற்றும் அவர்களின் நிலைகள் ஆபத்து இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று MOM செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இறந்த அந்த தொழிலாளி, ஜியான் சின் கன்ஸ்ட்ரக்ஷன் Pte. லிமிடெட் என்ற நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. "மேலும் விபத்து நடந்த அந்த பணியிடத்தில் அனைத்து விதமான பணிகளையும் தாற்காலிக்காக நிறுத்த சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மற்றும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் MOM செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

இந்த நாடு தொழில்நுட்பத்தில் டாப்பு டக்கரு...ஆனால் இங்கு எஸ்கலேட்டர் பயன்படுத்த தடை..! ஏன் தெரியுமா?

click me!