இந்த நாடு தொழில்நுட்பத்தில் டாப்பு டக்கரு...ஆனால் இங்கு எஸ்கலேட்டர் பயன்படுத்த தடை..! ஏன் தெரியுமா?

By Kalai Selvi  |  First Published Oct 10, 2023, 3:11 PM IST

எஸ்கலேட்டர் இருந்தால் நமது பயணத்தை எளிதாக்குகிறது. வசதியாக மேலே செல்ல முடியும் என்பதால் அனைவரும் எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த நாட்டில் எஸ்கலேட்டர் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன தெரியுமா?


ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன. அதை அங்கு வாழும் ஒவ்வொரு குடிமகனும் கடைபிடிக்க வேண்டும். மேலும், நாடு வளர்ச்சியடையும் போது,   புதிய அமைப்புகள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் டிஜிட்டல் இந்தியாவில் அதிக மால்கள் மற்றும் சொகுசு வசதிகள் உள்ளன. அதில் எஸ்கலேட்டரும் ஒன்று. முன்பு நாம் படிக்கட்டுகளில் ஏற வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை, மெட்ரோ ஸ்டேஷன் முதல் சிறிய மால்கள் வரை எஸ்கலேட்டர் வசதி உள்ளது. 

வளரும் நாடுகளில் எஸ்கலேட்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன, வெளிநாடுகளில் இது சாதாரணமானது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட ஒரு நாடு உலகில் உள்ளது. அப்படி ஒரு நாடு இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம். எந்த நாட்டில் எஸ்கலேட்டர் தடை உள்ளது, அதற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல்கள் இங்கே...

Tap to resize

Latest Videos

எஸ்கலேட்டர் தடைசெய்யப்பட்ட நாடு: தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஜப்பானில் தான் எஸ்கலேட்டர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் நகோயா நகரில் இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் எஸ்கலேட்டரை பயன்படுத்த முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி நகோயாவில் புதிய விதி அமலுக்கு வந்தது.  

எஸ்கலேட்டர் தடைக்கான காரணம் என்ன?
எல்லாவற்றிற்கும் மேலாக, எஸ்கலேட்டர்களின் பயன்பாடு ஏன் தடைசெய்யப்பட்டுள்ளது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. எஸ்கலேட்டர்களில் இருந்து மக்கள் தவறி விழுவதால் அவர்களை பாதுகாக்கவும், இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுப்பதும் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். எஸ்கலேட்டர்கள் தொடர்பாக ஜப்பானில் ஒரு சிறப்பு விதி உள்ளது. ஜப்பானில், பயணிகள் எஸ்கலேட்டரின் இடது பக்கத்தில் நிற்க வேண்டும், மற்றவர்கள் விரைவாக ஏறவோ இறங்கவோ வலது பக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். 

இதையும் படிங்க:  ஒரு கிராமமே ஒரு குழந்தையின் 1 வயது பிறந்த நாளை கொண்டாடுகிறது... ஏன் தெரியுமா?

எஸ்கலேட்டரில் செல்வதில்  கூட மக்கள் அவசரப்படுகிறார்கள். சொல்லபோனால் இவர்களின் அவசரத்தில், எஸ்கலேட்டரில் நிற்கும் மற்றவர்களுக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் கீழே விழும் அபாயம் உள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளின் நலனுக்காக இந்த எஸ்கலேட்டர் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் தற்போது அனைவரும் இதனை பயன்படுத்துவதால், அவசரம் காட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. 

இதையும் படிங்க:  ஜப்பானியர்கள் எப்படி தான்  பணத்தை மிச்சப்படுத்துகிறார்களாம்!  "அரிகடோ'' ரகசியம் இதோ..!!

ஜப்பானில் எஸ்கலேட்டர் பேரழிவு எவ்வளவு? 
ஜப்பான் புள்ளிவிவரங்களின்படி, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 805 எஸ்கலேட்டர் விபத்துகள் நடந்துள்ளன. பலர் எஸ்கலேட்டர்களை தவறாக பயன்படுத்துகின்றனர். இதனால், பல வகையான விபத்துகள் ஏற்படுகின்றன. புதிய உத்தரவை அமல்படுத்திய பிறகு, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கிய ரயில் நிலையங்களில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை அரசு ஒட்டியுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நகரம் ஏற்கனவே எஸ்கலேட்டர்களை தடை செய்துள்ளது:

எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றிய முதல் நகரம் நகோயா அல்ல. முன்னதாக அக்டோபர் 2021 இல், சைட்டாமா நகரத்திலும் இதேபோன்ற விதிகளை அரசாங்கம் அமல்படுத்தியது. அங்கும் மக்கள் எஸ்கலேட்டரை பயன்படுத்துவதில்லை.

click me!