"ஒரு மில்லியனரின் மனைவியான நான் ஒரு நாளில் எவ்வளவு செலவு செய்கிறேன்" என்ற தலைப்பில் ஒரு வீடியோவை கடந்த ஜூன் மாதம் லிண்டா பகிர்ந்துள்ளார்.
24 வயதான லிண்டா ஆண்ட்ரேட் சமூக ஊடக செல்வாக்கு உடையவர். அவர் கோடீஸ்வரனின் மனைவி என்று கூறிக்கொண்டு ஆடம்பரமான வாழ்க்கை முறையை சித்தரிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். "ஒரிஜினல் துபாய் ஹவுஸ்வைஃப்" என்று தன்னைப்பற்றிச் சொல்லிக்கொள்ளும் அவர், டிக்டாக்கில் 7 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பின்தொடரப்படுகிறார். இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள்.
அவரது பகட்டான வாழ்க்கை பற்றிய பதிவுகளும் கருத்துகளும் அவருக்கு புகழைப் பெற்றுக் கொடுத்திருப்பதைப் போல பலரின் வெறுப்பையும் சம்பாதிக்க வைத்துள்ளது. துபாய் தொழிலதிபரை மணந்திருக்கும் ஆண்ட்ரேட் பகிரும் சில வீடியோக்கள் அவ்ப்போது ஏதாவது ஒரு காரணத்துக்காக வைரலாகி அவரை லைம் லைட்டில் வைத்திருக்கிறது.
இந்நிலையில் லிண்டா வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ ஒன்று இப்போது வைரலாகியுள்ளது. "ஒரு மில்லியனரின் மனைவியான நான் ஒரு நாளில் எவ்வளவு செலவு செய்கிறேன்" என்ற தலைப்பில் ஒரு வீடியோவை கடந்த ஜூன் மாதம் பகிர்ந்துள்ளார். அதில் அவர் இரண்டு சானல் பைகளை (Chanel bags) தலா 7,000 டாலர் (சுமார் ரூ.5.8 லட்சம்) விலை கொடுத்து வாங்கியதாகவும், மாலுக்கு அழைத்துச் செல்ல ஒரு காரை வாடகைக்கு எடுத்ததாகவும் கூறுகிறார்.
ஒருமித்த குரலில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 5 மேற்கத்திய நாடுகள்
மேலும் அந்த ஒரு நாளில் மட்டும் மொத்தமாக 16,540 டாலர் (சுமார் ரூ. 13.7 லட்சம்) செலவிட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். பணக்காரக் கணவருக்கு மனைவியாக இருப்பதால் தனது சொகுசு வாழ்க்கை குறித்து பெருமையுடன் பகிர்ந்து வருகிறார். ஆனால், அவரது இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சாமானிய மக்களுக்கு கனவாக இருக்கும் சொகுசு வாழ்க்கையை அவரது வீடியோவில் பார்த்து ரசித்தவர்கள் இப்போது அவர்மீது கோபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இதனால் லிண்டா தனது ரசிகர்களாக இருந்த பலரிடம் பணத்திமிர் பிடித்தவர் என்ற கெட்ட பட்டத்தை பெற்றுவருகிறார்.
அமெரிக்காவின் கலிபோனியாவைச் சேர்ந்த லிண்டா, இப்போது துபாயில் தனது கணவர் ரிக்கி ஆண்ட்ரேடுடன் வசிக்கிறார். லிண்டாவின் கணவர் ரிக்கி கிரிப்டோ வர்த்தகத்தில் கொடிக்கட்டிப் பறக்கும் கோடீஸ்வரராக இருக்கிறார். ரியல் எஸ்டேட், செயற்கை நுண்ணிறவு தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் வைப் ஹோஸ்டிங் ஆகியவற்றிலும் முதலீடு செய்துள்ளார்.