விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நமது பிரபஞ்சத்தின் பிரமிக்க வைக்கும் படங்களை படம்பிடித்து, விண்வெளி ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகின்றது. நாசாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பூமி மற்றும் விண்வெளி சம்மந்தமான பல வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்படுவது பலரை ஈர்த்து வருகின்றது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று, நாசா எர்த், தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வித்யாசமான தீவின் செயற்கைக்கோள் படத்தைப் பகிர்ந்து கொண்டது. குறிப்பாக, அண்டார்டிக் தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்த தீவு, உயிருடன் உள்ள எரிமலையின் மையத்திற்கே நேரடியாக கப்பல்கள் செல்லக்கூடிய உலகின் ஒரே இடங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளது. குதிரைவாலி வடிவ தீவு போர்ட் ஃபோஸ்டர், துறைமுகம் மற்றும் எரிமலையின் வெள்ளத்தில் மூழ்கிய கால்டெராவைச் சூழ்ந்துள்ளது.
நாசா வெளியிட்ட அந்த பதிவில் அந்த தீவு ஒரு குதிரையின் பாதம் போன்ற வடிவத்தில் உள்ளது என்றும், மற்றும் நிலம் பாறைகள் மற்றும் மலைகள் மற்றும் சில சிகரங்களில் வெள்ளை பனியுடன் அதில் காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளது. அந்த தீவின் நடுவில் உள்ள துறைமுகத்தின் நீல நீரில் கப்பல்கள் செல்லக்கூடிய ஒரு திறப்பு இருப்பதையும் நம்மால் பார்க்கமுடிகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலே உள்ள அந்த படம் கடந்த மார்ச் 23, 2018 அன்று லேண்ட்சாட் 8 ஆல் படம்பிடிக்கப்பட்டது, மேலும் எரிமலையின் மேற்பகுதி தெரியும் வண்ணம் அந்த புகைப்படம் உள்ளது. அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள இரண்டு செயலில் உள்ள எரிமலைகளில் இந்த தீவும் ஒன்றாகும், மேலும் இது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து 20க்கும் மேற்பட்ட முறை வெடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது பூமியில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றாக இருந்தாலும், ஆண்டுக்கு சுமார் 15,000 பார்வையாளர்களைக் கொண்ட இந்த அண்டார்டிகாவில் உள்ள தீவு, தற்போது மிகவும் பிரபலமான சுற்றுலா அம்சமாக மாறி வருகின்றது. இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் நேரத்தை செலவிடலாம், அதே நேரம் இந்த புவிவெப்ப கடலில் குளியலும் போடலாம். மேலும் இந்த தீவில் அமைந்துள்ள சின்ஸ்ட்ராப் பெங்குவின் உலகின் மிகப்பெரிய பெங்குவின் இனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.