எகிப்திய நாகரிகங்களில் உடல்களை பதப்படுத்தி வைப்பது குறித்து நாம் பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம். சிலர் நேரில் சென்று மம்மி எனப்படும் பதப்படுத்தப்பட்ட உடலை பார்த்தும் இருப்போம். இந்நிலையில் இதேபோன்று அமெரிக்காவிலும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.
சுமார் 128 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவருடைய உடலை சில தினங்களுக்கு முன்பு அடக்கம் செய்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக அவருடைய உடல் எப்படி பதப்படுத்தப்பட்டது? ஏன் பதப்படுத்தப்பட்டது? என்பதை பின்வருமாறு காணலாம்.
இதுவரை, அதாவது கடந்த 128 ஆண்டுகளாக "Stoneman Willie" என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த ஒருவர், கடந்த 1895 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி ஒரு திருட்டு சம்பந்தமாக போலீசாரால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் இறந்து போகிறார். அவர் சிறைக்குள் வரும் பொழுது ஒரு பொய்யான பெயரை கூறி உள்ளே வந்த நிலையில் அவருடைய இருப்பிடம் குறித்த அடையாளம் காணப்படாத நிலையில் அவருடைய உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் இவ்வகை பதப்படுத்தலை "லெதர் ஸ்கின் மம்மிபைட்" என்று கூறுகின்றனர். பதப்படுத்தப்பட்ட அந்த உடலுக்கு Tuxedo என்று அழைக்கப்படும் ஒரு வகை உடையை அணிவித்து ஓரிடத்தில் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இறந்து, உடல் பதப்படுத்தப்பட்ட அந்த மனிதர் ஐரிஷ் நாட்டை சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அவருக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது, ஒரு பொருளை திருடி அவர் சிறையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுமார் 128 ஆண்டுகளாக அவருடைய உண்மையான பெயர் தெரியாமலேயே அவர் உடல் படுத்தப்பட்டு இருந்த நிலையில், அவருடைய பெயர் ஜேம்ஸ் மர்பி என்று தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இறந்த அவருடைய பெயர் ஜேம்ஸ் மர்பி என்றும், அவருக்கு இறுதி சடங்குகள் செய்து அவர் உடலை அடக்கம் செய்து அவர் ஆன்மாவை அமைதி பெற செய்ய வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து தற்போது ஜேம்ஸ் மர்பியின் உடல் சுமார் 128 ஆண்டுகள் கழித்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு கல்லறையும் எழுப்பப்பட்டுள்ளது.
சுமார் 128 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவருடைய உடல் பதப்படுத்தப்பட்டு சில இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு தற்பொழுது அடக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகெங்கும் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது.