Singapore News : பொதுவாக உணவு டெலிவரி செய்பவர்கள் எவ்வளவு தூரமாக இருந்தாலும் குறித்த நேரத்தில் உணவுகளை உரியவரிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்பதால் நாம் அறிவோம். அதே போல ஒரு அசாதாரண சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது.
கிராப் நிறுவனம் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் என்று உலகின் பல நாடுகளில் பல சேவைகளை அளித்து வருகின்றது. இந்நிலையில் அந்நிறுவன டெலிவரி பணியாளர் ஒருவர், தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூருக்கு, பயனர் ஒருவர் ஆர்டர் செய்த "சிக்கன் ரைஸ்சை" வாங்குவதற்காக விமானத்தில் பறந்து சென்ற சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் உள்ள ஒரு பயனர், சிங்கப்பூரில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்த நிலையில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இணையத்தில் வைரலாக ஒரு பெண்ணின் வீடியோவை தொடர்ந்த இந்த சம்பவம் தற்போது மிகப்பெரிய செய்தியாக மாறியுள்ளது என்றே கூறலாம்.
undefined
சிங்கப்பூர் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த, அந்த வீடியோவை எடுத்த பெண், அந்த டெலிவரி செய்யும் நபரை கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தில் கண்டதாக கூறியுள்ளார். ஆனால் அந்த நபரிடம், இந்த சிங்கப்பூர் பயணத்திற்கு யார் பணம் கொடுத்தார்கள் என்று அவரிடம் தான் கேட்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்த ஆர்டருக்கு டெலிவரி கட்டணம் எவ்வளவு என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார். தாய்லாந்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட இருந்த அந்த உணவு "ஹைனானீஸ் சிக்கன் ரைஸ்" சிங்கப்பூர் ஊடங்களால் தெரிவிக்கின்றன. அத்தகைய நாடுகடந்த உணவு விநியோகத்தின் சாத்தியம் குறித்து கருத்து தெரிவிக்க கிராப் நிறுவனத்தை பலர் அணுகியுள்ளனர்.
மேலும் தாய்லாந்து ஏர்போர்ட்டில் அந்த நபரை வீடியோ எடுத்த அதே நபர், சாங்கி விமான நிலையத்தில் அந்த நபரை தனது கிராப் உணவுப் பையுடன் செல்வதையும் படமெடுத்துள்ளார். உண்மையில் சுமார் 2000 கிலோமீட்டர் விமானத்தில் பயணம் செய்து வாங்கி வரும் அளவிற்கு அந்த சிக்கன் ரைசில் என்ன உள்ளது என்று தெரியவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D