ஹமாஸ் பயங்கரவாதிகளால் சித்ரவதை செய்யப்பட்ட ஜெர்மன் டாட்டூ கலைஞர்.. இரங்கல் தெரிவித்த இஸ்ரேல் !!

By Raghupati R  |  First Published Oct 30, 2023, 5:05 PM IST

ஹமாஸ் தாக்குதல் நடத்திய போது இஸ்ரேலில் இருந்த ஷானி லூக் என்ற ஜெர்மன் பெண்ணின் சடலம் இஸ்ரேலால் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடலை ஹமாஸ் தீவிரவாதிகள் நிர்வாணமாக அணிவகுத்து சென்றனர்.


அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு ஊர்வலமாகச் செல்லப்பட்ட ஜெர்மன் டாட்டூ  கலைஞரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேல் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்துள்ளது.

ஷானி லூக்கின் மரணத்தை இஸ்ரேல் உறுதிப்படுத்தியது. அவரது தாயார் அவர் இருக்கும் இடம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். ஹமாஸால் தாக்கப்பட்ட இஸ்ரேலில் நடந்த ட்ரைப் ஆஃப் சூப்பர்நோவா இசை விழாவில் லூக் கலந்து கொண்டார். அவர் காணாமல் போனதாக அவரது முதல் உறவினர் டோமசினா வெயின்ட்ராப்-லூக் அறிவித்தார்.

Tap to resize

Latest Videos

"நிச்சயமாக ஷானி தான். அவள் அமைதிக்காக ஒரு இசை விழாவில் இருந்தாள். இது எங்கள் குடும்பத்திற்கு ஒரு கெட்ட கனவு" என்று கூறினார். "இசை விழாவில் இருந்து கடத்தப்பட்டு, ஹமாஸ் பயங்கரவாதிகளால் சித்திரவதை செய்யப்பட்டு, காஸாவில் அணிவகுத்துச் செல்லப்பட்ட ஷானி, அளவிட முடியாத பயங்கரங்களை அனுபவித்தார். எங்கள் இதயங்கள் உடைந்துள்ளன.

அவரது நினைவு வரமாக இருக்கட்டும்" என்று இஸ்ரேலிய அரசாங்கம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது. ஷானி கலந்து கொண்ட இசை விழா, ஹமாஸ் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட முதல் இடங்களில் ஒன்றாகும். அவர் ஹமாஸ் போராளிகளால் பிடிக்கப்பட்டு, பிக்கப் டிரக்கின் பின்புறத்தில் தெருக்களில் ஊர்வலமாகச் செல்லப்பட்டார். அதன் வீடியோ வைரலாக பரவியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஷானியின் கிரெடிட் கார்டு காஸாவில் பயன்படுத்தப்பட்டதாக அவரது வங்கியில் இருந்து தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இது அவர் திருடப்பட்டிருக்கலாம் என்றும் ஷானியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, ஷானி லூக்கின் தாய் தனது மகள் உயிருடன் இருப்பதாக நம்புவதாகக் கூறியிருந்தார்.

ஒரு வீடியோ செய்தியில் அவரது தாயார் ரிகார்டா லூக், காசா பகுதியில் உள்ள ஒரு குடும்ப நண்பர் தனது மகள் ஹமாஸ் மருத்துவமனையில் உயிருடன் இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். “ஷானி உயிருடன் இருக்கிறார். ஆனால் தலையில் பலத்த காயம் இருப்பதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் இப்போது எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதாகும். நாங்கள் கேட்கிறோம்.. இல்லை, ஜெர்மன் அரசாங்கத்தை விரைவாகச் செயல்படுமாறு கோருகிறோம்," என்று ரிக்கார்டா வீடியோவில் கூறினார். அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் பலமுனை தாக்குதலை நடத்தியது. 1,400 பேரைக் கொன்றது மற்றும் 230 பேரைக் கடத்தியது. பதிலடியாக, இஸ்ரேல் காசா பகுதியில் உள்ள நிறுவனங்களைத் தாக்கியது, இது இதுவரை 8,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது என்று காசா சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

click me!