Singapore News : சிங்கப்பூரில் உள்ள வீடுகளை பொறுத்தவரை பாதுகாப்பு மற்றும் வசதிகள் மேற்பட்டுக்கொண்டே வரும் அதே நேரம், ஒரு புதிய அச்சுறுத்தல் ஒன்றும் அதிகரித்து வருகிறது. அது தான் மின்சார ரீதியாக ஏற்படும் தீ விபத்து.
கடந்த 2022ம் ஆண்டில், சிங்கப்பூரில் உள்ள வீடுகளில் ஏற்படும் தீக்கு, இரண்டாவது முக்கிய காரணமாக மின்சாரத் தீ தான் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றது. இது கவலை அளிக்கும் விஷயமாக இருந்தாலும், இது தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கிறது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) அதிகாரப்பூர்வ தரவுகளின்படி கடந்த சில ஆண்டுகளில் இந்த மின்சார தீ விபத்து 18.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 2021ல் சிங்கப்பூரில் உள்ள வீடுகளில் மின்சார ரீதியாக ஏற்படும் தீ 192 சம்பவங்களாக இருந்த நிலையில், 2022ல் அது 228 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சரி இந்த விபத்து ஏற்பட கரணம் என்ன? இதில் யார் குற்றவாளிகள்?
சிங்கப்பூரைச் சேர்ந்த நிபுணர் கெல்வின் டோவின் கூற்றுப்படி, இந்த வகை தீ விபத்து பெரும்பாலும் நாம் கவனிக்காமல் விடும் வீட்டுக் மின்சாதன பொருட்கள், பழுதடைந்த வயரிங், தேய்ந்து போன சாக்கெட்டுகள் தான் காரணம். எனவே, நம் வீடுகளைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்?
நமது வீடுகளின் கவனிக்க முடியாத ஒரு மூலையில் ஒரு அத்தியாவசிய ஆனால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட ஒன்று உள்ளது. அது தான் DB பெட்டி, மின்சாரம் அல்லது சர்க்யூட் பிரேக்கர் பாக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டின் ஒரு மூலையில் இரும்பினாலோ அல்லது பிளாஸ்டிகினாலோ செய்யப்பட்ட அந்த டிபி பாக்ஸ் மக்கள் அடிக்கடி சோதனை செய்வதில்லை.
தங்களது வீட்டில் மின்சாரத்தில் ஏதேனும் பிரச்சனை வரும் பொழுது மட்டுமே அதனை கவனிக்கின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி நாம் அடிக்கடி நமது டிபி பாக்ஸ் சோதிக்க வேண்டும் அவை பழுதடைந்து இருந்தால் அவற்றை மாற்றி அமைக்க வேண்டும். DB பெட்டியில், இரண்டு மின் கூறுகள் உள்ளன - மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர்கள் (MCBs) மற்றும் மீதமுள்ள தற்போதைய சர்க்யூட் பிரேக்கர்கள் (RCCBs).
RCCBக்கள் நமது வீட்டின் பாதுகாப்புக் காவலர்களாக வேலை செய்கின்றன. மின்சாதனங்கள் அல்லது லைட்டிங் சர்க்யூட்டரிகளில் இருந்து ஏதேனும் பூமியில் ஏற்படும் தவறுகள் அல்லது கசிவு மின்னோட்டங்களை கவனிக்கிறது. அசாதாரண கசிவுக்கான முதல் அறிகுறியாக, தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் வீட்டுப் பாதுகாப்பைப் பாதுகாக்கும் சக்தியைத் துண்டிப்பதன் மூலம் அவை செயல்படுகின்றன. இதற்கிடையில், MCB கள் எங்கள் வீட்டுக்கு வரும் மின்னோட்ட கட்டுப்பாட்டாளர்களாக செயல்படுகிறது.
ஆகவே நமது DB பேட்டி மற்றும் அதனுள் இருக்கின்ற இந்த இரண்டு விஷயங்களை சரிவர பராமரித்தாலே நிச்சயம் பெரிய அளவில் மின்சாரத்தால் ஏற்படும் தீயினை குறைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D